#Breaking: மோசடி வழக்கு; நடிகர் விஷாலின் தங்கை கணவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு.!
#Breaking: அண்ணாமலை கைது.. டாஸ்மாக் ஊழல் ரூ.40000 கோடி.. A1 குற்றவாளி முக ஸ்டாலின் - பரபரப்பு பேட்டி.! தமிழக அரசியலில் திடுக்.!

மக்கள் அனைத்தையும் கவனிக்கிறார்கள். விரைவில் திமுக ஆட்சிக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
தமிழ்நாடு டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனையின் முடிவில், ரூ.1000 கோடி ஊழல் நடந்தது உறுதி செய்யப்பட்டது. இந்த விஷயம் தமிழ்நாட்டில் மிகப்பெரிய அரசியல் பூகம்பத்தை கிளப்பி இருக்கும் நிலையில், ஆளும் திமுக அரசு மௌனம் காக்கிறது. மேலும், ஊழலே நடைபெறாத இடத்தில் அமலாக்கத்துறை ஊழல் நடந்ததாக கூறி அவதூறு பரப்புகிறது என துறையின் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறி வருகிறார்.
இதையும் படிங்க: #Breaking: தொடை நடுங்கி திமுக - அண்ணாமலை கடும் கண்டனம்.. பாய்ச்சல்.!
பாஜக நிர்வாகிகள் கைது
இந்நிலையில், டாஸ்மாக் ரூ.1000+ கோடி ஊழல் விஷயத்துக்கு பொறுப்பேற்று, துறையின் அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி விலக வேண்டும் என பாஜக சார்பில், இன்று (17 மார்ச் 2025) காலை 10 மணியளவில், சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த பாஜக அழைப்பு விடுத்தது. போராட்டத்துக்கு புறப்பட்ட பிற மாவட்ட பாஜக நிர்வாகிகள் ஆங்காங்கே கைது செய்யப்பட்டனர். பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், மாநில செயலாளர் வினோஜ் பி செல்வம் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். கள்ளக்குறிச்சி பாஜகவினர் 150 பேர் கள்ளக்குறிச்சியிலேயே கைது செய்யப்பட்டனர். சட்டப்பேரவை வளாகம் முன்பு போராட்டம் நடத்த முயன்ற 50 க்கும் மேற்பட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டனர். இந்த விசயத்திற்கு கண்டனம் தெரிவித்த அண்ணாமலை, அடுத்த போரட்டம் தேதி குறிப்பிடாமல் அறிவிக்கப்படும் என எக்ஸ் பக்கத்தில் கூறினார்.
ரூ.1000 கோடி ஊழல் விவகாரம்
இந்நிலையில், இன்று நீலாங்கரை இல்லத்தில் இருந்தவாறு செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, "இந்த ஆர்ப்பாட்டம் தேதியுடன் சொல்லப்பட்டதால், காவல்துறை முன்கூட்டியே அதனை தடுக்கிறது. அடுத்த ஆர்ப்பாட்டத்தை நாங்கள் தேதி சொல்லாமல் நடத்துவோம். டாஸ்மாக் விவகாரத்தில் முதல்வர் உட்பட அரசு ஆட்சியாளர்களை முற்றுகையிட எங்களுக்கு உரிமை உள்ளது. அமலாக்கத்துறை முதற்கட்டமாக சோதனை நடத்தியே ரூ.1000 கோடி ஊழல் என கூறியுள்ளது. மேற்படி சோதனை நடந்தால் இன்னும் பல விஷயம் வெளிவரும்.
ரூ.40000 கோடி ஊழல் எனது அனுமானம் - அண்ணாமலை
தமிழ்நாட்டில் நல்ல அரசியலை முன்னெடுக்க அமலாக்கத்துறை சோதனை உதவி செய்கிறது. 2026 தேர்தலில் கட்டாயம் மாற்றம் வரும். அதற்கு அமலாக்கத்துறை சோதனை மற்றும் இவர்களின் ஊழல் காரணமாக இருக்கும். டாஸ்மாக்கில் ரூ. 40000 கோடி என்பது எனது அனுமானம். அமலாக்கத்துறை தற்போதைக்கு சின்ன துருமபாக ரூ.1000 கோடி என கூறியுள்ளது. 2024 பாராளுமனற்ற முழுவதும் டாஸ்மாக் பணத்தை வைத்துதான் நடத்தி இருக்கிறார்கள்.
முதல்வரே முதல் குற்றவாளி
செந்தில் பாலாஜி உத்தமரா? இந்தியாவிலேயே மிகவும் மோசடி நபர்களில் முதல் அவர்தான். இவர் ஊழல் அமைச்சரவையை நடத்தி வருகின்றனர். ஊழல் பேர்வழி சாராய அமைச்சராக இருக்கிறர். உச்சநீதிமன்றமே அவரை அமைச்சராக தொடருவதாக வருத்தம் கூறுகிறது. டாஸ்மாக் ஊழலில் முக ஸ்டாலின் இருக்கிறார். முதல் குற்றவாளி தான் முதல்வர், இரண்டாவது குற்றவாளி தான் செந்தில் பாலாஜி தான். தமிழ்நாட்டில் அமலாக்கத்துறை அறிக்கையை தாக்கல் செய்தால், முதல்வரே முதல் குற்றவாளியாக இருப்பார்.
மக்கள் பாடம் புகட்டுவார்கள்
டாஸ்மாக் ஊழல் 2021 மே மாதத்துக்கு பின்னர் தொடங்கி இருக்கிறது. அமைச்சரின் கண்களுக்கு தெரியாமல் மோசடி நடக்கிறதா? டாஸ்மாக் பணத்தில் ஆட்சி நடக்கவில்லை என அமைச்சர் ஒப்புக்கொண்டால், வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யட்டும். திமுக ஆட்சிக்கு வந்ததுக்கு பின்னர் டாஸ்மாக் வருமானம் அபரிதமாக அறிவித்தது. முக ஸ்டாலின் ஊழல் குற்றசாட்டு அம்பலமாகிவிடும் என பல செயலை செய்கிறார். டெல்லி ஊழலை விட தமிழ்நாட்டில் ஊழல் மோசமாக இருக்கிறது. ஊழல் பேர்வழிகள் ஆட்சியில் இருக்கிறார்கள் என மக்கள் கவனித்துக்கொண்டு இருக்கின்றனர்." என கூறினார்.
இறுதியில் பாஜக தலைவர் அண்ணாமலை, கைது செய்யப்பட்டார். அவர் அனுமதியின்றி போராட்டம் நடத்த முயன்றதாக எழும்பூரில் கைது செய்யப்பட்டார்.
இதையும் படிங்க: #Breaking: திமுகவினர் கொழுக்க சுரண்டப்படும் மாநிலத்தின் வளங்கள் - அண்ணாமலை கடும் தாக்கு.!