#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மீண்டும் அபார வெற்றிபெற்று அதிர்ச்சியளித்த ஆப்கானிஸ்தான்; அடுத்த ஆட்டத்தில் பாகிஸ்தானின் நிலை என்னவாகும்?
ஐக்கிய அரபு எமிரகத்தில் நடைபெற்று வரும் 14 வது ஆசியா கோப்பையின் 6 வது ஆட்டம் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் இலங்கை அணியை புரட்டி எடுத்த ஆப்கானிஸ்தான் அணியும் வங்கதேசம் அணியும் மோதின. இந்த ஆட்டத்திலும் தனது முழு திறமையை வெளிப்படுத்திய ஆப்கானிஸ்தான் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வென்று மீண்டும் அதிர்ச்சியளித்தள்ளது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பாட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் இசனுல்லாஹ் ஜெனட் 8 ரன்கள் எடுத்த நிலையில் ஹைதர் பந்துவீச்சில் வெளியேறினார். பின்னர் வந்த ரஹ்மத் ஷாத் 10 ரன்களில் 6 ஆவது ஒவேரில் அவுட்டானார்.
பின்னர் முஹம்மது சாசாத்துடன் ஜோடி சேர்ந்த சாஹிடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சிறப்பாக ஆடிய சாசாத் 37 ரன்கள் எடுத்த நிலையில் சாகிப் வீசிய 20 ஆவது ஒவேரில் அவுட்டானார். அவரை தொடர்ந்து அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரியாய் தொடங்கின. தனது அரைசதத்தை கடந்த சாஹிடி 58 ரன்கள் எடுத்து வெளியேறினார். ஒரு கட்டத்தில் 41 ஒவேரில் 160 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகளை இழந்திருந்தது.
பின்னர் எட்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த நயிப் மற்றும் ரஷீத் கான் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். வங்கதேசத்தின் பந்துவீச்சாளர்களை அடித்து நொறுக்கினர். இதனால் ஆப்கானிஸ்தான் அணியின் ரன் விகிதம் அதிகரிக்க தொடங்கியது. இருவரும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் ஆப்கானிஸ்தான் அணி 255 ரன்கள் என்ற சிறப்பான ஸ்கோரை எடுக்க பெரிதும் உதவினார். நயிப் 42 ரன்களும், ரஷீத் கான் 57 ரன்களும் எடுத்திருந்தனர்.
வங்கதேச அணியின் சார்பில் ஷாகிப் அதிகபட்சமாக நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
256 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது வங்கதேச அணி. சென்ற ஆட்டத்தில் தனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஆப்கானிஸ்தான் அணி இந்த ஆட்டத்திலும் அதே திறமையை வெளிப்படுத்த தொடங்கினர்.
ஆட்டத்தின் முதலிலிருந்தே வங்கதேச அணியின் பேட்ஸ்மேன்கள் வரிசையாக விக்கெட்டுகளை இழக்க துவங்கினர். சாகிப் மட்டும் சிறிது நேரம் நிலைத்து நின்று 32 ரன்கள் எடுத்தார். வங்கதேச அணி வீரர்கள் எடுத்த அதிகபட்ச ஸ்கோர் இது தான். பின்னர் வந்த வீரர்கள் ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர்.
இறுதியாக வங்கதேச அணி 42.1 ஓவர்களில் 119 ரன்கள் மட்டுமே எடுத்து அணைத்து விக்கெட்டுகளையும் இழந்து இந்த ஆட்டத்தில் தோல்வியை தழுவியது. அந்த அணியின் ஹொசைன் மட்டும் 26 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
ஆப்கானிஸ்தான் அணியின் சார்பில் முஜீப் உர் ரஹ்மான், நயிப், ரஷீத் கான் தலா இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினர். அரைசதம் விளாசி இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்திய ரஷீத் கான் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஏற்கனவே சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்ற இந்தியா அணியும் வங்கதேச அணியும் இன்று நடைபெறும் போட்டியில் விளையாடுகின்றன. மேலும் இன்றே நடைபெறும் மற்றொரு போட்டியில் பாகிஸ்தான் அணியும் ஆப்கானிஸ்தான் அணியும் மோதுகின்றன.