#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அதிரவைத்த ஆப்கானிஸ்தான்; கலங்கி நிற்கும் பாகிஸ்தான்; முடிவு என்னவாகும்!!
ஐக்கிய அரபு எமிரகத்தில் நடைபெற்று வரும் 14 வது ஆசியா கோப்பையின் சூப்பர் 4 சுற்றின் இரண்டு ஆட்டங்கள் இன்று நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியா அணி வங்கதேச அணியுடனும் இன்று மற்றொரு போட்டியில் பாகிஸ்தான் அணியும் ஆப்கானிஸ்தான் அணியுடனும் மோதுகின்றன.
கடந்த இரண்டு ஆட்டங்களில் இலங்கை மற்றும் வங்கதேசத்தை மிரள வைத்த ஆப்கானிஸ்தான் அணி இன்றைய ஆட்டத்திலும் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பாட்டிங் தேர்வு செய்தது. துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய இசனுல்லாஹ் மற்றும் முஹம்மது சாசாத் நிதானமா ஆட்டத்தை வெளிப்படுத்தினர். நவாஸ் வீசிய 9 ஆவது ஓவரில் இசனுல்லாஹ் 20 எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து சாசாத் 10 ரன்கள் எடுத்து நவாஸ் வீசிய அடுத்த ஓவரில் அவுட்டாக ஆப்கானிஸ்தான் அணி 11 ஓவர்களில் இரண்டு விக்கட்டுகளை இழந்து 31 ரன்கள் எடுத்தது.
பின்னர் ரஹ்மத் ஷாவுடன் ஷகிடி இணைந்தார். இருவரும் சிறிதுநேரம் நிலைத்து நின்று ஆடினர். ஆனால் மீண்டும் நவாஸ் வீசிய 26 ஆவது ஓவரில் ஷா 36 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய கேப்டன் ஆப்கான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதிரடி காட்டி அரைசதம் விளாசிய ஆப்கான் 67 ரன்களில் ஆட்டம் இழந்தார். இவர் 5 சிக்சர்களை விளாசினார்.
பின்னர் வந்த நபி, ஷட்ரான் அடுத்தடுத்து ஆட்டமிழக்க ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 257 ரன்கள் எடுத்தது. நிதானமாக ஆடிய ஷகிடி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 97 ரன்கள் எடுத்திருந்தார்.
258 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு ஆப்கானிஸ்தான் அணி ஆரம்பத்திலே அதிர்ச்சியளித்தது. பாகிஸ்தான் அணியின் துவக்க ஆட்டக்காரர் ஃபக்கர் ஷமான், முஜிப் உர் ரஹ்மான் வீசிய முதல் ஓவரிலேயே ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
பின்னர் இணைந்த பாபர் அசாம் மற்றும் இமாம் உல் ஹக் நிதானமாக ஆடி வருகின்றனர். பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 80 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.
இந்த ஆட்டத்திலும் ஆப்கானிஸ்தான் அணி பாகிஸ்தான் அணியை வென்று அதிர்ச்சி அளிக்குமா என்று எதிர்பார்த்த நிலையில் ரசிகர்கள் உள்ளனர்.