#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஆசிய கோப்பை: இந்தியாவையும் நடுங்க வைத்த ஆப்கானிஸ்தான்; கடைசி வரை போராடியும் வெல்ல முடியாத இந்திய அணி!!
ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றின் இன்றைய ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த தொடரில் இதுவரை தோல்வியே சந்திக்காத இந்திய அணி இறுதிப்போட்டிக்கு ஏற்கனவே தகுதிபெற்று விட்டது. இறுதி போட்டிக்கு தகுதிபெறும் வாய்ப்பை இழந்தாலும் இந்த தொடரில் எதிரணிகளை கலங்கடித்த ஆப்கானிஸ்தான் இன்றும் இந்தியாவை கலங்கடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி சார்பில் 5 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கேப்டன் மற்றும் தொடக்க ஆட்டகாரரான ரோஹித் ஷர்மாவிற்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதால் இந்திய அணிக்கு மீண்டும் கேப்டனாகும் வாய்ப்பு தோனிக்கு கிடைத்துள்ளது. இது கேப்டனாக தோனி களமிறங்கும் 200-வது ஆட்டமாகும்.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்து வருகிறது. துவக்க ஆட்டக்காரராக களமிறங்கிய முஹம்மத் ஷாசாத் ஆரம்பமே அதிரடி காட்டினார். மற்றொரு துவக்க ஆட்டக்காரர் ஜாவேத் அஹ்மதி சற்று தடுமாற்றத்துடன் ஆடி வந்தார்.
12 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் அணி 65 ரன்களை எடுத்து சிறப்பான துவக்கத்தை வெளிப்படுத்தியது. முஹம்மத் ஷாசாத் அரை சதத்தை கடந்தார். ஆனால் ஜடேஜா வீசிய 13 ஆவது ஓவரில் ஜாவேத் அஹ்மதி 5 ரன்னிலும் அடுத்து வந்த ரஹ்மத் ஷா 3 ரன்னில் ஜடேஜா வீசிய 15 ஆவது ஓவரில் அடுத்தடுத்து அவுட்டாகினர்.
ஜடேஜா மட்டும் தான் கலக்குவாரா, நானும் கலக்குறேன் பாருங்க என்ற வகையில் பந்தை கையில் எடுத்தார் குல்தீப். 16 ஆவது ஓவரை வீசிய குல்தீப் ஷாஹிடி மற்றும் ஆப்கான் ஆகிய இருவரையும் அடுத்தடுத்த பந்துகள் முறையே அவுட்டாகினர். இருவரும் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார்.
விக்கெட்டுகள் ஒருபுறம் விழுந்து கொண்டிருந்தாலும் ஷாசாத் மட்டும் தனது அதிரடியை நிறுத்தியபாடில்லை. 6 சிக்ஸர்கள் மற்றும் 10 பவுண்டரிகளை விளாசியுள்ள ஷாசாத் தனது சதத்தினை பூர்த்தி செய்துள்ளார். அவர் 116 பந்துகளில் 127 ரன்கள் எடுத்து கேதார் ஜாதவ் பந்தில் ஆட்டமிழந்தார்.
பின்னர் வந்த முஹம்மது நபியும் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார். அவர் 56 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 252 ரன்கள் எடுத்தது.
இந்தியாவின் சார்பில் ஜடேஜா அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
253 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் லோகேஷ் ராகுல் மற்றும் அம்பத்தி ராயுடு இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தி இருவருமே அரைசதம் கடந்தனர். அணியின் எண்ணிக்கை 110 ஆக இருக்கும்போது அம்பத்தி ராயுடு 57 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அவரைத் தொடர்ந்து லோகேஷ் ராகுலும் 60 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பின்னர் வந்த கேப்டன் தோனி மற்றும் மனிஷ் பாண்டே இருவரும் தலா 8 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். அவர்களை தொடர்ந்து விக்கெட்டுகள் வரிசையாக சரிய ஆரம்பித்தன. வழக்கம் போல இந்த ஆட்டமும் மிகவும் விறுவிறுப்படைய தொடங்கியது. ஆப்கானிஸ்தான் அணி தங்கள் மிரட்டல் பந்துவீச்சை தொடர ஆரம்பித்தது.
49 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 246 ரன்கள் எடுத்திருந்தது மீதமுள்ள ஒரு ஓவரில் 7 ரன்கள் எடுத்தார் வெற்றி என்ற நிலை உருவானது இந்திய அணியின் சார்பில் ரவீந்திர ஜடேஜா 20 ரன்களுடன் ஆடிக்கொண்டிருந்தார். மிகவும் விறுவிறுப்பான இந்த சூழலில் ஆப்கானிஸ்தான் அணிகள் ரஷீத் கான் கடைசி ஓவரை
வீசுவதற்காக வந்தார். இந்த ஓவரின் 2-வது பந்தில் ஜடேஜா பவுண்டரி அடிக்க இந்தியா வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உருவானது.
அடுத்த பந்தில் ஜடேஜா ஒரு ரன் எடுக்க கலீல் அஹமத் பந்தினை எதிர்கொள்ளும் நிலை உருவானது. அவர் சுதாரித்து ஒரு ரன் எடுக்க ரன்கள் சமநிலையில் இருந்தன. அடுத்த பந்தில் ஒரு ரன் எடுத்து இந்திய அணிக்கு வெற்றியைத் தேடித் தருவார் ஜடேஜா என்று அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். ஆனால் அந்த பந்தில் ஜடேஜா அவுட்டாக இந்த போட்டி டையில் முடிந்தது.
That moment...#INDvAFG #AsiaCup2018 #AsiaCup pic.twitter.com/LlfFgBFZDv
— Cricbuzz (@cricbuzz) September 25, 2018
ஆப்கானிஸ்தான் அணி சார்பில் அலாம், முகமது நபி மற்றும் ரஷீத் கான் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். அதிரடியாக ஆடி சதமடித்த முஹம்மத் ஷாசாத் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.