ஆசியா கோப்பை: ஆட்டம் காண்பித்த ஆப்கானிஸ்தான்; பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தான் போராடி வெற்றி!!



pakistan-won-the-match-with-more-struggle

 

கடந்த இரண்டு ஆட்டங்களில் இலங்கை மற்றும் வங்கதேசத்தை மிரள வைத்த ஆப்கானிஸ்தான் அணி இன்றைய ஆட்டத்திலும் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பாட்டிங் தேர்வு செய்தது. துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய இசனுல்லாஹ் மற்றும் முஹம்மது சாசாத் நிதானமா ஆட்டத்தை வெளிப்படுத்தினர். நவாஸ் வீசிய 9 ஆவது ஓவரில் இசனுல்லாஹ் 20 எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து சாசாத் 10 ரன்கள் எடுத்து நவாஸ் வீசிய அடுத்த ஓவரில் அவுட்டாக ஆப்கானிஸ்தான் அணி 11 ஓவர்களில் இரண்டு விக்கட்டுகளை இழந்து 31 ரன்கள் எடுத்தது. 

Asia cup 2018

பின்னர் ரஹ்மத் ஷாவுடன் ஷகிடி இணைந்தார்.  இருவரும் சிறிதுநேரம் நிலைத்து நின்று ஆடினர். ஆனால் மீண்டும் நவாஸ் வீசிய 26 ஆவது ஓவரில் ஷா 36 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.  பின்னர் களமிறங்கிய கேப்டன் ஆப்கான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதிரடி காட்டி அரைசதம் விளாசிய ஆப்கான் 67 ரன்களில் ஆட்டம் இழந்தார். இவர் 5 சிக்சர்களை விளாசினார். 

பின்னர் வந்த நபி, ஷட்ரான் அடுத்தடுத்து ஆட்டமிழக்க ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 257 ரன்கள் எடுத்தது. நிதானமாக ஆடிய ஷகிடி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 97 ரன்கள் எடுத்திருந்தார். 

Asia cup 2018

258 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு ஆப்கானிஸ்தான் அணி ஆரம்பத்திலே அதிர்ச்சியளித்தது. பாகிஸ்தான் அணியின் துவக்க ஆட்டக்காரர் ஃபக்கர் ஷமான், முஜிப் உர் ரஹ்மான் வீசிய முதல் ஓவரிலேயே ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். 

Asia cup 2018

ஐக்கிய அரபு எமிரகத்தில் நடைபெற்று வரும் 14 வது ஆசியா கோப்பையின் சூப்பர் 4 சுற்றின் இரண்டு ஆட்டங்கள் நேற்று நடைபெற்றன. இதில் வங்கதேசத்துடன் மோதிய இந்தியா அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நேற்று நடந்த மற்றொரு போட்டியில் அணியும் ஆப்கானிஸ்தான் அணியுடனும் மோதின.

பின்னர் இணைந்த பாபர் அசாம் மற்றும் இமாம் உல் ஹக் நிதானமாக ஆடினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்தனர். இந்த இருவரின் விக்கெட்டை எடுக்க முடியாமல் ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்கள் மிகவும் திணறினர். இந்த இருவரும் இரண்டாவது விக்கெட்டிற்கு 150 ரன்களை சேர்த்தனர். இறுதியில் துரதிஷ்டவசமாக இமாம் உல் ஹக் 80 ரன்னில் ரன் அவுட் ஆகி வெளியேறினார். அவரை தொடர்ந்து பாபர் அசாமும் 66 ரன்களில் ரஷீத் கான் பந்தில் அவுட் ஆனார். 

பின்னர் வந்த சொஹைல் 13 ரன்களில் வெளியேற பாகிஸ்தான் அணி 194 ரன்கள் 4 விக்கெட்டுகளை இழந்தது. அவரைத் தொடர்ந்து களமிறங்கிய சர்ப்பிரைஸ் அஹமது 8 ரன்களில் வெளியேறினார். அப்போது அணியின் எண்ணிக்கை 216. மீதமுள்ள 5 ஓவர்களில் 42 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஆசிப் அலி களமிறங்கினார். வந்த வேகத்தில் ஒரு சிக்சரை விளாசிய அவர் அடுத்த ஓவரிலேயே ரஷீத் கான் பந்தில் அவுட்டாகி வெளியேறினார். கடைசி 2 ஓவர்களில் 19 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை பாகிஸ்தானுக்கு உருவானது. 49 ஆவது ஓவரை ஆப்கானிஸ்தான் சார்பில் ரஷீத் கான் வீசினார். அந்த ஓவரில் முகமது நவாஸ் 10 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட்டாகி வெளியேறினார்.

Asia cup 2018

அடுத்து களமிறங்கிய ஹசன் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து அசத்தினார். கடைசி ஓவரில் 10 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை உருவானது. பாகிஸ்தான் அணிக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக சோயிப் மாலிக் ஆடிக்கொண்டிருந்தார். கடைசி ஒவேரில் ஆட்டம் மிகவும் விறுவிறுப்பானது. அந்த ஓவரின் இரண்டாவது பந்தில் சிக்ஸர் அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார் சோயிப் மாலிக். மேலும் அடுத்த பந்தில் பௌண்டரி அடித்து பாகிஸ்தான் அணியை வெற்றிபெறச்செய்தார் சோயிப் மாலிக். மேலும் அவர் அரைசதத்தை கடந்தார்.

இதன் மூலம் பாக்கிஸ்தான் அணி மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் போராடி வெற்றிபெற்றது.