#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
வேலை செய்த இளம்பெண்களை வீட்டில் அடைத்து வைத்து மிரட்டினாரா புஷ்பவனம் குப்புசாமி? சிசிடிவியால் வெளிவந்த அதிர்ச்சி உண்மைகள்!
பிரபல கிராமியப் பாடகர்களான புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அனிதா குப்புசாமி அவர்கள் தங்களது மகள்களுடன் சென்னையில் அண்ணாமலைபுரத்தில் வசித்து வருகின்றனர். மேலும் அவர்கள் தங்களது வீட்டின் அருகிலேயே விஹா என்ற ஆர்கானிக் சோப்பு தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்கள். இங்கு மைலாப்பூர் பகுதியைச் சேர்ந்த 18 வயது மற்றும் 17 வயதுடைய சகோதரிகள் வேலை செய்து வந்துள்ளனர்.
இந்நிலையில், அவர்கள் சமீபத்தில் நாங்கள் வேலை செய்ததற்கான சம்பளத்தைக் கேட்டததாகவும்,அதற்கு அவர்கள் தங்களை அடைத்து வைத்து தங்களது தாயை வரச்சொல்லி காலில் விழச் சொல்லி மன்னிப்புக் கேட்டுவிட்டு அழைத்து செல்லும்படி கூறியதாகவும் புகார் அளித்துள்ளனர். இந்த புகார் குறித்து அனிதா குப்புசாமியிடம் விசாரணை மேற்கொண்ட போலீசார் வீட்டில் பதிவாகியிருந்த சிசிடிவி வீடியோக்களை ஆய்வு செய்துள்ளனர். அதில் அந்த சிறுமிகள் கூறியது பொய் என தெரியவந்துள்ளது.
சிறுமிகள் இருவருக்கும் ஞாயிற்றுகிழமை வேலை செய்ததற்காக 200 ரூபாய் சம்பளமாக வழங்கியுள்ளனர்.மேலும் புஷ்பவனம் குப்புசுவாமி மற்றும் அனிதா குப்புசாமி இருவரும் கச்சேரிக்காக வெளியூர் சென்ற நிலையில் அவர்களது மகள் மட்டும் தனியாக இருந்துள்ளனர். அப்பொழுது அந்த சிறுமிகள் தங்களது தாயை அழைத்து வந்து சம்பளம் குறைவாக இருப்பதாக கூறி தகராறு செய்துள்ளனர்.
அதனை தொடர்ந்து மறுநாள் வெளியூரிலிருந்து வந்த புஷ்பவனம் குப்புசாமி தம்பதியினர் இரு சிறுமிகளையும் அவர்களது பெற்றோரையும் வரவழைத்து போலீசார் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். மேலும் அந்த சிறுமிகள் தாங்கள் கொடுத்த ஆதார்கார்டு ஜெராக்ஸில் தங்களது பிறந்த ஆண்டை திருத்தி கொடுத்துள்ளனர் என்பதும் தெரிய வந்துள்ளது. இந்நிலையில்18 வயது நிரம்பாத பெண்கள் வேலைக்கு வேண்டாம் என்று அனிதா கூறியதால் அந்த பெண்களின் தாயார் அவர்களை அடித்து அவரது காலில் விழச் சொல்லியுள்ளார். ஆனால் அனிதா அவர்களை வெளியே செல்ல கூறியுள்ளார்.