கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
"கல்யாணம் பண்ண சொன்னா வீடு புகுந்து.." மிரட்டிய இளைஞன்.! தட்டி தூக்கிய காவல் துறை.!!
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்துவிட்டு திருமணம் செய்ய வற்புறுத்தியதால் கொலை மிரட்டல் விடுத்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் அந்த இளைஞரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கல்லூரி காதல்
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 21 வயது இளம் பெண் செய்யாறு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் அந்தப் பெண்ணிற்கும் அவருடன் படிக்கும் 20 வயது இளைஞனுக்கும் இடையே காதல் மலர்ந்திருக்கிறது. மேலும் காதல் ஜோடிகள் இருவரும் உல்லாசமாக சுற்றி திரிந்துள்ளனர்.
திருமணத்திற்கு வற்புறுத்தியதால் கொலை மிரட்டல்
இந்நிலையில் அந்த இளைஞர் கல்லூரி மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பலமுறை உல்லாசமாக இருந்திருக்கிறார். இந்நிலையில் அந்த இளம் பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி இருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த இளைஞர் அந்தப் பெண்ணை வீடு புகுந்து வெட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டல் கொடுத்துள்ளார்.
இதையும் படிங்க: விமானப்படை சாகச மரணங்கள்: கும்பகோணத்தை இழுக்கும் ஆர்.எஸ் பாரதி.. எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு சரமாரி விளாசல்.!
போலீசில் வழக்கு பதிவு
இதனைத் தொடர்ந்து அதிர்ச்சி அடைந்த இளம் பெண் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: தென்காசி: கள்ளகாதலியுடன் சேர்த்து செய்யக்கூடாத வேலை; தலைமை காவலருக்கு நேர்ந்த சோகம்..!