கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
மண்வெட்டியால் அடித்து மாமியார் படுகொலை... மது போதையில் மருமகன் வெறி செயல்.!!
திருப்பத்தூர் மாவட்டத்தில் குடும்பத் தகராறு காரணமாக மாமியார் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக குமரேசன் என்ற 32 வயது நபரை கைது செய்துள்ள காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீட்டோடு மாப்பிள்ளை
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த அச்சமங்கலம், பட்டாளம்மன் கோவில் வட்டத்தில் வசித்து வருபவர் முனிசாமி. இவரது மனைவி காஞ்சனா(57). இந்த தம்பதிக்கு வரலட்சுமி(27) என்ற மகள் இருக்கிறார். இந்நிலையில் வரலட்சுமி அதே பகுதியைச் சேர்ந்த குமரேசன்(32) என்பவரை கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனையடுத்து குமரேசன் தனது மனைவியுடன் வீட்டோடு மாப்பிள்ளையாக இருந்து வந்தார்.
மது பழக்கத்திற்கு அடிமை
நாளடைவில் குமரேசன் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி இருக்கிறார். மேலும் தினமும் மது குடித்து விட்டு வந்து தனது மனைவி மற்றும் அவரது குடும்பத்தினருடன் தகராறில் ஈடுபட்டிருக்கிறார். இதனால் வரலட்சுமிக்கு அவரது கணவர் குமரேசனுக்கும் இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்திருக்கிறது. இது தொடர்பாக முனிசாமி மற்றும் காஞ்சனா ஆகியோர் மருமகன் குமரேசனை பலமுறை கண்டித்து இருக்கின்றனர்.
இதையும் படிங்க: தொடர் பாலியல் வன்புணர்வால் கர்ப்பமான சிறுமி... அதிரடி தீர்ப்பு வழங்கிய போக்சோ நீதிமன்றம் .!!
மண்வெட்டியால் அடித்து கொலை
இந்நிலையில் சம்பவம் நடந்த தினத்தன்று குமரேசன் வழக்கம் போல மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்திருக்கிறார். மேலும் அவரது மனைவி வரலட்சுமியுடன் தகராறில் ஈடுபட்டிருக்கிறார். அப்போது குறுக்கிட்ட காஞ்சனா தனது மருமகனை கண்டித்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த குமரேசன் அருகில் இருந்த மண்வெட்டியை எடுத்து தனது மாமியாரின் தலையில் தாக்கி இருக்கிறார். இதில் படுகாயமடைந்த காஞ்சனாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி காஞ்சனா பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் காஞ்சனா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொடூரத் தாக்குதல் நடத்திய குமரேசனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: சமைக்கலயான்னு கேட்டது ஒரு குத்தமாயா .." கழுத்தறுக்கப்பட்டு கணவன் படுகொலை.!! மனைவி வெறி செயல்.!!