கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
14 வயது சிறுமி கர்ப்பம்.!! 63 வயது முதியவருக்கு சாகும் வரை சிறை.!!
திருவண்ணாமலை மாவட்டத்தில் 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பாக 63 வயது முதியவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு விதித்திருக்கிறது. மேலும் இந்த தீர்ப்பு பாலியல் குற்றவாளிகளுக்கு பாடமாக அமையும் என நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.
14 வயது சிறுமி கர்ப்பம்
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ள திருவத்திபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கஜேந்திரன். 63 வயதான இவர் கடந்த 2020 ஆம் வருடம் அதே பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்தார். இதனைத் தொடர்ந்து அந்த சிறுமி கர்ப்பம் அடைந்திருக்கிறார். இதனையறிந்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சிறுமியிடம் விசாரித்த போது கஜேந்திரன் தன்னை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்தார். இதனையடுத்து கஜேந்திரன் மீது சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
கஜேந்திரன் கைது
சிறுமியின் பெற்றோர் புகார் அளித்ததை தொடர்ந்து கஜேந்திரனை கைது செய்த காவல்துறையினர் அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்று வந்த நிலையில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது.
இதையும் படிங்க: #Breaking: அப்படிப்போடு.. நாளை 4 மாவட்டங்களில் உள்ள பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை.!
சாகும் வரை சிறை தண்டனை
இந்த வழக்கு தொடர்பாக சாட்சிகள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கியது தொடர்பாக 63 வயதான குற்றவாளி கஜேந்திரனுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதையும் படிங்க: நடத்தையில் சந்தேகம்... மனைவி கொடூர கொலை.!! கணவன் தற்கொலை.!!