கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
கொடூரத்தின் உச்சம்... ஆசைக்கு இணங்க மறுத்த மனைவி... பிளேடால் வெட்டிய 67 வயது கணவன்.!!
உல்லாசத்திற்கு இணங்க மறுத்த மனைவியை கணவன் பிளேடால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவத்தில் காயம் அடைந்த பெண் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் தாக்குதல் நடத்திய 67 வயது முதியவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஜாஃபர் அலி - பாத்திமா பீவி தம்பதி
சென்னை சாஸ்திரி நகரில் வசித்து வருபவர் ஜாஃபர் அலி. 67 வயதான இவருக்கு திருமணமாகி பாத்திமா பீவி (60) என்ற மனைவியும் 4 குழந்தைகளும் உள்ளனர். இவர்களது குழந்தைகள் அனைவருக்கும் திருமணம் ஆகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இவர்களது இளைய மகள் இறந்து விட்டார். இதனைத் தொடர்ந்து வியாசர்பாடி ஹவுசிங் போர்டில் தங்களது பேத்தியுடன் ஜாஃபர் அலி மற்றும் அவரது மனைவி வசித்து வருகின்றனர்.
உல்லாசத்திற்கு மறுத்ததால் ஆத்திரம்
இந்நிலையில் சம்பவம் நடந்த தினத்தன்று காலையில் ஜாஃபர் அலி தனது மனைவியை உல்லாசத்திற்கு அழைத்து இருக்கிறார். இதற்கு அவரது மனைவி பாத்திமா பீவி மறுப்பு தெரிவித்துள்ளார். இது ஜாபர் அலியை கோபமடையச் செய்திருக்கிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர் தன் கையில் வைத்திருந்த பிளேடால் மனைவியின் கை மற்றும் முகம் உள்ளிட்ட இடங்களில் கடுமையாக வெட்டி இருக்கிறார். இதனால் ரத்த வெள்ளத்தில் சரிந்த பாத்திமா பீவியை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மருத்துவமனையில் அவருக்கு 14 தையல்கள் போடப்பட்டது.
இதையும் படிங்க: கதறிய கள்ளக்காதல் ஜோடி... பதறிய கணவன்... அட்வைஸ் கூறி அனுப்பி வைத்த காவல்துறை.!!
காவல்துறை விசாரணை
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு விரைந்த காவல்துறையினர் படுகாயம் அடைந்த பாத்திமா பீவியிடம் விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தப்பி ஓடிய ஜாஃபர் அலியை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: ரயில்வே ஊழியரின் மனைவிக்கு பாலியல் தொல்லை... குற்றவாளியை காப்பாற்ற கட்டப்பஞ்சாயத்து.!!