கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
8 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொலை மிரட்டல்.!! 55 வயது கூலி தொழிலாளி தப்பியோட்டம்.!!
கன்னியாகுமரி அருகே பள்ளி சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலி தொழிலாளி, அந்த சிறுவனையும் அவனது குடும்பத்தாரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக தலைமறைவாக இருக்கும் கூலி தொழிலாளியை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
சிறுவனுடன் பழக்கம்
கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை பகுதியைச் சேர்ந்தவர் ராஜு. 55 வயதான இவர் கூலி தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த மூன்றாம் வகுப்பு படிக்கும் 8 வயது மாணவன் மீது பாசம் காட்டுவது போல் நடித்திருக்கிறார். மேலும் அந்த சிறுவனுக்கு சாக்லேட் வாங்கி கொடுத்து அவனிடம் அன்பாக பழகி இருக்கிறார்.
சிறுவனுக்கு பாலியல் தொல்லை மற்றும் மிரட்டல்
இந்நிலையில் சிறுவனுடன் அன்பாக பழகுவது போல் நடித்து வந்த ராஜு கடந்த செப்டம்பர் 9-ம் தேதி பாழடைந்த கட்டிடத்திற்கு சிறுவனை அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும் இது தொடர்பாக பெற்றோரிடமோ அல்லது யாரிடமோ கூறினால் சிறுவனின் பெற்றோரை கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி இருக்கிறார்.
இதையும் படிங்க: #Breaking: புதிய உச்சம் தொடப்போகும் தங்கம், வெள்ளி விலை.. இன்று கிடுகிடு உயர்வு.!
வழக்கு பதிவு
இந்நிலையில் சிறுவனின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து அவனது பெற்றோர் இது குறித்து விசாரித்துள்ளனர். அப்போது சிறுவன் தனக்கு நடந்த கொடுமைகள் குறித்து பெற்றோரிடம் தெரிவித்துள்ளான். இதனைத் தொடர்ந்து சிறுவனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இந்த புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருக்கும் குற்றவாளியை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: கரூர்: தமிழுக்கு வந்த பகீர் சோதனை: அங்கன்வாடி மைய திறப்பு விழாவில் வேதனை.!