#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பிக்பாஸ் வின்னரான ஆரி அசத்தலான புகைப்படத்துடன் வெளியிட்ட முதல் பதிவு! கொண்டாடும் ரசிகர்கள்!
விஜய் தொலைக்காட்சியில் ஒவ்வொரு ஆண்டும் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். இதன் மூன்று சீசன்கள் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றநிலையில் நான்காவது சீசன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டு நாளுக்கு நாள் சுவாரசியங்களுடன் விறுவிறுப்பாக சென்ற நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முடிவுக்கு வந்தது.
இந்த சீசனில் சோம், ரம்யா, ரியோ, பாலா, ஆரி ஆகியோர் இறுதி நாட்கள் வரை வந்த நிலையில் நடிகர் ஆரி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். மேலும் பாலா இரண்டாவது இடத்தையும், ரியோ மூன்றாவது இடத்தையும் பெற்றனர்.
எல்லாம் புகழும் வாக்களித்த உங்களுக்கே....#Aari #AariArujunan #BiggBossTamil4@narayan_aadhi @shortfundly_ind pic.twitter.com/NWvyL9kIOv
— Aari Arjunan (@Aariarujunan) January 17, 2021
இந்த நிலையில் பிக்பாஸ் டைட்டிலை வென்ற ஆரி கோப்பையை தனது கையில் வைத்தவாறு உள்ள புகைப்படத்தை வெளியிட்டு, எல்லா புகழும் வாக்களித்த உங்களுக்கே என பதிவிட்டுள்ளார். இந்நிலையில் ரசிகர்கள் அவரை கொண்டாடி வருகின்றனர்.