#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
போர் தொழில் திரைப்படத்தின் வெற்றி விழாவில் திடீரென்று மன்னிப்பு கேட்ட சரத்குமார்.. என்ன நடந்தது தெரியுமா.?
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் சரத்குமார். இவர் அரசியல் மற்றும் சினிமா இரண்டிலும் கலக்கி வருகிறார். தற்போது சரத்குமார் கதை மற்றும் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
இதன்படி தற்போது சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம் 'போர்த்தொழில்'.இப்படத்தை விக்னேஷ் ராஜா இயக்கி இருக்கிறார். மேலும் இப்படத்தில் அசோக் செல்வன் மற்றும் நிகிலா விமல் போன்றவர்கள் நடித்திருக்கின்றனர்.
'போர் தொழில்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் பாராட்டை பெற்றது. தற்போது தமிழ் சினிமா ரசிகர்கள் சைக்கோ த்ரில்லர் திரைப்படங்களை அதிகம் விரும்பி வருவதால், அந்த மாதிரியான கதையை கொண்ட 'போர் தொழில்' திரைப்படத்தை ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
இப்படத்தின் வெற்றி விழா சமீபத்தில் நடைபெற்றது. அப்போது பத்திரிக்கையாளர்கள் இயக்குனரிடம், "உங்க டீமுக்கு தலைகனம் அதிகம் ஆயிடுச்சா. ஒரு படம் தானே வெற்றி பெற்றிருக்குது. அதுக்குள்ள இப்படியா" என்று கேள்வி கேட்டார் இதற்கு புரியாமல் பார்த்த இயக்குனரிடம், "உங்க காஸ்டிங் டிசைனர் பத்திரிகையாளரை கேவலமாக பேசுகிறார். என்னவென்று பாருங்கள் என்று சண்டை போடும் விதமாக பேசினார். இதற்காக சரத்குமார் உடனடியாக மேடையில் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டார்" இந்த வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது.