#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இணையத்தை கலக்கும் குட்டி நயனின் வைரல் புகைப்படம்!
நடிகை அனிகா சுரேந்திரன் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.
தமிழ் சினிமாவில் வளர்த்து வரும் இளம் நடிகைகளில் அனிகா சுரேந்திரனும் ஒருவர். தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தற்போது பிரபலமாக உள்ளவர் நடிகை அனிகா சுரேந்திரன். என்னை அறிந்தால் திரைப்படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்தன் மூலம் ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்றவர். இதன் மூலம் இவருக்கு அதிக பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது.
தல அஜித்தின் விஸ்வாசம் படத்தில் மகளாக நடித்து அப்பா மகள் பாசத்தை மக்களுக்கு வெளிப்படுத்தி ரசிகர்களிடையே மேலும் பிரபலமானார். மேலும் இவர் நானும் ரவுடி தான், மிருதன், பாஸ் என்கிற பாஸ்கரன், உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் இவர், அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.