#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பொங்கலுக்கு களமிறங்கும் அருண் விஜயின் மிஷன் சாப்டர் 1; படப்பிடிப்பு தளத்தில் எடுத்த போட்டோஸ் வைரல்.!
விஜய் இயக்கத்தில், நடிகர்கள் அருண் விஜய், எமி ஜாக்சன், நிமிஷா சஜயன், அபி ஹாசன், பரத் போபண்ணா உட்பட பலர் நடித்து உருவாகியுள்ள திரைப்படம் மிஷன் சாப்டர் 1 (Mission Chapter 1).
லைகா ப்ரொடக்சன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு, ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். சந்தீப் கே விஜய் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார்.
எமி ஜாக்சன் தமிழில் அறிமுகமான பின்னர், தனது காதலருடன் குழந்தையை பெற்றெடுத்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். இதனால் படங்களிலும் நடிக்காமல் இருந்தார்.
5 ஆண்டுகள் கழித்து எமி ஜாக்சன் அருண் விஜயுடன் மிஷன் படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், படம் பொங்கலன்று வெளியிடப்படுவது உறுதி செய்யப்பட்ட நிலையில், படப்பிடிப்பு தளங்களில் எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.