மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"பொய்களை அதிகமாக பரப்புறாங்க; அப்படி செய்யாதீங்க": நடிகர் கூல் சுரேஷ் வேண்டுகோள்..!
மறைந்த மூத்த நடிகர் விஜயகாந்தின் உடல், சென்னை கோயம்பேடு தேமுதிக தலைமை அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. பல திரையுலக பிரபலங்களும் தங்களின் இரங்கலை நேரில் வந்து தெரிவித்தனர். இரங்கல் தெரிவிப்பின்போது, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தான் தவசி படத்திற்கு வசனம் எழுதியதை நினைவு கூறினார். இது சமூக வலைத்தளங்களில் விமர்சனத்தை சந்தித்தது.
இந்நிலையில், நடிகர் கூல் சுரேஷ் இதுதொடர்பான விசயத்திற்கு தனது கண்டனத்தை தெரிவித்து இருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், "கேப்டனின் இந்நிலைக்கு பிரேமலதாவே காரணம் என பொய்யான விஷயத்தை யாரும் பரப்ப வேண்டாம். கேப்டனை நன்றாக கவனித்துக்கொண்டு புண்ணியவதியே பிரேமலதா.
சீமான் தவசி திரைப்படத்திற்கு வசனம் எழுதியது குறித்து தெரிவித்தார். அவர் வசனம் எழுதியது இல்லை என்று கூறுகிறார்கள். அவை தவறு. அவர்தான் தவசி படத்திற்கு வசனம் எழுதினார். சினிமாவை பொறுத்தமட்டில் இயக்குனராக அறிமுகமானவர், இயக்குனராகவே இருக்க விரும்புவர். வசனம் எழுதியதை பெரிதளவு காண்பித்துக்கொள்ளமாட்டார். தவறான செய்திகளை பரப்பாதீர்கள்" என்று ஆதங்கத்துடன் கூறினார்.