மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கீர்த்தி செட்டியை அந்த மாதிரி வர்ணித்த கூல் சுரேஷ்.. இவருக்கு வேற வேலையே இல்லையா என்று கமெண்ட் செய்து வரும் நெட்டிசன்கள்.?
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரான வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியானது 'மாநாடு' திரைப்படம். இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இப்படத்திற்கு பிறகு இவரின் இயக்கத்தில் 'கஸ்டடி' திரைப்படம் தற்போது திரையரங்கில் வெளிவந்திருக்கிறது.
'கஸ்டடி' திரைப்படத்தில் நாக சைதன்யா, கீர்த்தி ஷெட்டி, சரத்குமார், அரவிந்த்சாமி, ராம்கி போன்றவர்கள் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜாவும், இளையராஜாவும் இனைந்து இசையமைத்த இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் வெளியாகியுள்ளது.
இதுபோன்ற நிலையில், கேட்காமல் தானே வந்து தலை கொடுக்கும் ஆடு போல ஒரு படம் விடாமல் எல்லா படத்திற்கும் தானாகவே முன்வந்து பிரமோஷன் செய்து வரும் கூல்சுரேஷ், தற்போது 'கஸ்டடி' திரைப்படத்திற்கு இவரின் வித்தியாசமான பிரமோஷன் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
பத்திரிக்கையாளர்கள் பேட்டியில், கஸ்டடி திரைப்படத்தை குறித்து பேசிய கூல்சுரேஷ் சரத்குமார், ராம்கி இன்னும் அப்படியே இளமையாகவே இருக்கிறார்கள். மேலும் இப்படத்தின் கதாநாயகி கீர்த்தி செட்டிக்கு கோவை பழ உதடு, நாவல் பழ கண்ணு பார்ப்பதற்கு அழகாக இருக்கிறார். இவரின் நடிப்பும் அட்டகாசமாக இருக்கிறது என்று வர்ணித்து இருக்கிறார். நடிகையை மட்டும் இவ்வாறு வர்ணித்திருப்பது குறித்து நெட்டிசன்கள் பரபரப்பாக பேசி வருகின்றனர்.