"எனக்கு சினிமாவில் நடிப்பதற்கு சுத்தமாக பிடிக்காது" நடிகை நித்யா மேனன் கூறிய உண்மை....!?
நடிகர் தனுஷின் வரலாற்றுக்கால படம் பற்றிய புதிய தகவல்.
தமிழ் சினிமாவில் இன்றைய காலகட்டத்தில் பல திரைப்படங்கள் வெளிவந்து கொண்டிருந்தாலும்,வரலாற்று திரைப்படங்கள் அவ்வப்போதுதான்,வெளிவருகின்றன.
காரணம் சாதாரண படங்களை விட இவ்வகை படங்களுக்கு ஆகும் செலவுதான். அப்படி வரும் படங்களுக்கு இன்று,ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உண்டு.இத்தனைக்கும் அவர்களது அபிமான நட்சத்திரங்களின் படங்கள் என்றால் கொண்டாடி மகிழ்கின்றனர்.
அவ்வகையில் ரிலீசுக்காக காத்திருக்கும் 'சீமராஜா'வை தொடர்ந்து,இயக்குனர் விஜய் இயக்க உள்ள வரலாற்று கதையில் தனுஷ் நடிக்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.இப்படம் தமிழர்களின் பழம்பெரும் நாகரீக தொட்டிலாக விளங்கிய குமாரி கண்டத்தை மையமாக கொண்ட படமாம். இதற்காக விஜய் தற்போதே திரைக்கதை அமைக்கும் பணியில் தீவீரமாக இறங்கியுள்ளார். இதற்கு முன்பு இப்படத்தில் நடிகர் ஜெயம் ரவி தான் ஹீரோவாக நடிக்க இருந்தார் கால்சீட் பிரச்சினையால் மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது நடிகர் தனுஷ் நடித்துள்ள 3 படங்கள் வெளியாக தயார் நிலையில் உள்ளது. தொடர்ந்து தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்திற்காக ஒரு படத்தை இயக்கியும் வருகிறார். இப்படத்தில் ஸ்ரீகாந்த், நாகர்ஜுனா, அதிதிராவ் என பல முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
.