ஒரே மாசத்துல 5 கிலோ வரை உடல் எடையை குறைக்க இந்த தானிய கஞ்சி குடித்து பாருங்க.!?



kuthiraivali-kanji-recipe-for-weight-loss

உடல் எடையை எவ்வாறு குறைக்கலாம்

தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் உடல் எடையை அதிகரிப்பு என்பது மிகப்பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது. உடல் எடையை குறைப்பதற்கு பலரும் பலவிதமான முயற்சிகளை செய்து வருகின்றனர். அவை பெரும்பாலும் பக்கவிளைவுகளை ஏற்படுத்துவையாகவே இருந்து வருகின்றன. எனவே உடல் எடையை ஒரே மாதத்தில் 5 கிலோ வரை குறைப்பதற்கு குதிரைவாலி தானிய கஞ்சியை குடித்து பாருங்க. இதை எப்படி செய்யலாம் என்பதை குறித்து பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.

Health

குதிரைவாலி கஞ்சி செய்ய தேவையான பொருட்கள்

குதிரைவாலி அரிசி - 3/4 கப்,
பச்சை பயறு - 1 கப்,
பூண்டு - 5 பல்,
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்,
உப்பு - சுவைக்கேற்ப,
தண்ணீர் - தேவையான அளவு
துருவிய தேங்காய் - 1 கையளவு
செய்முறை
முதலில் பச்சை பயிறை இரவில் நன்றாக ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் காலையில் ஒரு குக்கரில் குதிரைவாலி அரிசியை எடுத்து நன்றாக கழுவி அதனுடன் ஊற வைத்த பச்சைப்பயிறு, வெந்தயம், பூண்டு பற்கள் சேர்த்து நான்கு கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி தேவைக்கேற்ப உப்பு சேர்த்து மூடி 7 விசில் வரும் வரை நன்றாக வேக வைத்துக் கொள்ள வேண்டும்.  பின்னர் குக்கர் மூடியை திறந்து கஞ்சி மிகவும் கெட்டியாக இருந்தால் சிறிது சுடு தண்ணீர் சேர்த்து கலந்து விட்டு துருவிய தேங்காயை சேர்த்து சிறிது நேரம் மூடி வைத்து பரிமாறினால் சுவையான குதிரைவாலி தானிய கஞ்சி தயார்.

இதையும் படிங்க: வாழைக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து மருத்துவர்கள் அறிவுரை என்ன.!?

இதையும் படிங்க: ஆட்டு குடல் குழம்பு ஒரு முறை இப்படி ட்ரை பண்ணி பாருங்க.. டேஸ்ட் வேற லெவலில் இருக்கும்.!?