பிரபல நடிகர் குடிபோதையில் தன் தாயை குளியலறைக்குள் செய்த கொடூரம்!.



actor killed his mother in bathroom

மும்பை லோகந்த்வாலா பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில், லக்சயா சிங் என்ற விளம்பர நடிகரும், அவரது தாயார் சுனிதாவும் வசித்து வந்தனர். லக்சயா சிங் மது போதைக்கு அடிமையக இருந்துள்ளார்.

இந்த நிலையில் இவருக்கும் அவரின் தாய்க்கும் இடையே பணத் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது போதையில் இருந்த அவர் நிலை தடுமாறி அவரின் தாயை தாக்கியுள்ளார். ஒருகட்டத்தில் அவரின் தாய் சுனிதாவை, நடிகர் லக்சயா சிங் குளியலறையில் தள்ளியதாக கூறப்படுகிறது.

lakshaya sing

அப்போது சுனிதா தலை மோதி, ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்துள்ளார். அதை கவனிக்காத அவரது மகன், கதவை பூட்டிவிட்டுச் சென்றுள்ளார். காலையில் குளியலறை கதவை திறந்தபோது, தாய் சுனிதா சடலமாக கிடந்ததை கண்ட லக்சயா சிங், காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.

தகவலறிந்து வந்த காவலகத்துறையினர் அவரிடம் விசாரித்துள்ளனர். அதற்கு பதிலளித்த லக்சயா சிங்,  யாரோ மந்திரம் செய்து தாயை கொன்றுவிட்டதாக கூறியுள்ளார். இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் லக்சயா தான் அவரது தாய் சுனிதாவை கொன்றது உறுதியானது. இதையடுத்து காவல்துறையினர் லக்சயா சிங்கை கைது செய்துள்ளனர்.