வீர மங்கையின் பிறந்தநாள்.! மரியாதை செலுத்தி தவெக தலைவர் விஜய் எடுத்த உறுதி.!
"இப்பவே ரூ.27 லட்சம் வேணும்" - ரோஹிணிக்கு செக் வைத்த விஜயா.. வைரல் ப்ரோமோ இதோ.!
விஜய் தொலைகாட்சியில் மக்களின் பேராதரவுடன் ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் நெடுந்தொடர் சிறகடிக்க ஆசை (Siragadikka Aasa). இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரங்களில் வெற்றி வசந்த், கோமதி பிரியா, சல்மா அருண், அனிதா ஸ்ரீகுமார், ஸ்ரீதேவா, பாக்கியலட்சுமி, ப்ரீத்தி ரெட்டி, சுருதி நாராயணன் உட்பட பலரும் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த வாரம் முதலாக ரோகிணியின் சித்து வேலைகளில் ஒன்றான ரூ.27 இலட்சம் விவகாரம், கனடாவில் இருந்து வந்த மனோஜின் முன்னாள் காதலி ஜீவாவினால் வட்டியுடன் அம்பலமானது. இதனால் ஆத்திரமடைந்த விஜயா, ரோகினியை வெளுத்து வாங்கினார்.
ரோகினிக்கு செக் வைத்த விஜயா
அதேநேரத்தில், மனோஜை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் வகையில், மகனிடம் அதிகாரத்தை செலுத்தி, தம்பதியை பிரிப்பது போலவும், ரோகிணியை கீழ்த்தரமாக நடத்துவது போலவும் செயல்பட்டார். இதனிடையே, இன்று வெளியான ப்ரோமோவில் அடுத்த அதிர்ச்சி ஒன்று வந்துள்ளது.
இதையும் படிங்க: "கதவை திறக்குறேன் வந்துருங்க" - பிக்பாஸ் 8 கோவா குழுவுக்கு விஜய் சேதுபதி எச்சரிக்கை.!
அதாவது. மனோஜின் கடைக்கு தந்தையை முதலாளியாக்கிய முத்து, அவரை முதலாளி என ஊழியர்களிடம் அறிமுகம் செய்கிறார். இதனால் ஆவேசமான விஜயா, ரூ.27 இலட்சம் பணத்திற்காகத்தான் முத்து அப்படி நடக்கிறான். ரோகிணி, நீ உடனே மாமாவிடம் பேசி உன் அப்பாவை பணம் அனுப்ப சொல்லு என கூறுகிறார்.
இதனால் ரோகினி அடுத்து என்ன செய்வது? என தெரியாமல் விழிபிதுங்குகிறார்.
இதையும் படிங்க: பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் திடீர் மரணம்; அதிர்ச்சியில் ரசிகர்கள்.!!