வீட்டுக்குள்ள அடிதடி, வெளிய கொண்டாட்ட கும்மியடி.. இது பிக் பாஸ் தோழர்கள் சங்கம்.! வைரல் வீடியோ இதோ.!



 Bigg Boss Tamil Season 8 Satya Anshitha Jeffrey Anandhi New Year Celebration 

பிக் பாஸ் தோழர்கள் சங்கத்தில் இருந்தவர்கள், புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஒன்றிணைந்தனர். 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட பிக் பாஸ் தமிழ் சீசன் 8, இறுதிக்கட்டத்தை நோக்கி எட்டி இருக்கிறது. போட்டியில் எஞ்சி இருப்போரில் யார் வெற்றியாளர் என்ற எதிர்பார்ப்பு தற்போதே எழுந்துவிட்டது. 

பிக் பாஸ் வீட்டில் இருந்து முன்னதாக பலரும் வெளியேறி இருந்த நிலையில் சத்யா, அன்ஷிதா, ஜெப்ரி, ஆனந்தி ஆகியோர் நல்ல நண்பர்களாகவும், போட்டியின்போது கடுமையான போட்டித்தன்மையுடனும் விளையாடி இருந்தனர். 

இதையும் படிங்க: பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப்போவது இவர்கள்தான்? வெளியான தகவல்.!

புத்தாண்டு கொண்டாட்டம்

இதனிடையே, பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தவர்கள், புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஒன்றாக இணைந்தனர். இவர்கள் நீச்சல் குளம் ஒன்றில் உற்சாகத்துடன் ஆட்டம் போட்டு விளையாடி மகிழும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

இதையும் படிங்க: ஜெப்ரி அடித்ததால் வலியில் துடித்த ராணவ் மருத்துவமனையில் அனுமதி.! கையில் கட்டு.! ரெட் கார்டு கன்பார்ம்.!!