வீர மங்கையின் பிறந்தநாள்.! மரியாதை செலுத்தி தவெக தலைவர் விஜய் எடுத்த உறுதி.!
#Breaking: எஸ்வி சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை - சென்னை உயர்நீதிமன்றம் உறுதி.!
பெண் பத்திரிகையாளர் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த எஸ்.வி சேகருக்கு, ஒருமாத சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளத்தில் பெண் பத்திரிகையாளர் குறித்து எஸ்.வி சேகர் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து ஒன்றை பதிவு செய்தார். இந்த விஷயம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் பத்திரிகையாளர் 2018 ம் ஆண்டு புகார் பதிவு செய்தார்.
நீதிமன்றத்தில் விசாரணை
முகநூலில் பதிவு செய்த பதிவுக்கு எதிராக மத்திய குற்றப்பிரிவு சென்னை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இதையும் படிங்க: தனுஷின் இட்லி கடை பட பர்ஸ்ட்லுக் வெளியீடு; லிங்க் உள்ளே.!
தீர்ப்பு
சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு பின்னர் ரூ.10 ஆயிரம் அபராதம், ஒரு மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த விசயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
மேல்முறையீட்டில் வாதம்
இந்த மனு விசாரணை நடந்து வந்த நிலையில், பத்திரிகையாளர் தரப்பில் விசாரணையை முன்னெடுத்தபோது, "எஸ்.வி சேகர் முன்னாள் எம்.எல்.ஏ. அதனால் அவர் கல்வியறிவு பெற்று இருக்கிறார்.
தண்டனை உறுதி
முகநூலில் பதிவு செய்யப்படும் பதிவு ஏற்படுத்தும் தாக்கம் அவருக்கு தெரியும். அதனால் அவர்க்கு தண்டனை உறுதி செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. சர்ச்சை பதிவு உடனடியாக நீக்கப்பட்டது என எஸ்.வி சேகர் தரப்பு வாதம் நீதிபதிகளால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
இதனால் சென்னை சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்வதாக கூறிய சென்னை உயர்நீதிமன்றம், மேல்முறையீடு அவகாசத்திற்காக, தண்டனை 90 நாட்கள் தள்ளிவைக்கப்படுகிறது என தெரிவித்தது.
இதையும் படிங்க: 7ஜி ரெயின்போ காலனி படத்தின் இரண்டாம் பாகம்; இயக்குனர் செல்வராகவன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!