#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அடேங்கப்பா.. நடிகர் பிரபுவா இது! ஆள் அடையாளமே தெரியாம மாறிட்டாரே! ரசிகர்களை வாயடைக்கவைத்த இந்த புகைப்படத்தை பார்த்தீங்களா!!
தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக அறிமுகமாகி தனது திறமையால் முன்னேறி பப்ளிமாஸ் ஹீரோவாக வலம் வந்து மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகர் பிரபு. அவர் 80ஸ் மற்றும் 90ஸ் காலகட்டங்களில் ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து பெரும் ரசிகர்கள் பட்டாளத்தையே கொண்டு உள்ளார்.
மேலும் நடிகர் பிரபு தற்போது பல படங்களில் முக்கிய துணை கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வருகிறார். இந்த நிலையில் பிரபு அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகிவரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம் பிரபு, விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, த்ரிஷா, சரத்குமார், ரியாஸ் கான் என பெரும் நட்சத்திர பட்டாளமே நடிக்கவுள்ளது.
இந்நிலையில் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் பிரபு அதற்காக தனது உடல் எடையை குறைத்துள்ளாராம். மேலும் அவர் உடல் மெலிந்து ஆள் அடையாளமே தெரியாமல் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. அதனை கண்ட ரசிகர்கள் பிரபுவா இது? என ஆச்சரியம் அடைந்துள்ளனர்.