#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அடேங்கப்பா.. நடிகர் பிரகாஷ்ராஜ் இத்தனை கோடிக்கு சொந்தகாரரா.! அவரது சொத்துமதிப்பு எவ்ளோ பார்த்தீங்களா!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக, மக்கள் மனம் கவர்ந்த வில்லனாக வலம் வருபவர் நடிகர் பிரகாஷ் ராஜ். இவர் 1988 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளிவந்த மிதிலேய சீதேயரு என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து அவர் பல கன்னட படங்களில் நடித்துள்ளார். மேலும் அவர் தமிழ் சினிமாவில் டூயட் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.
தொடர்ந்து அவர் தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து எக்கசக்கமான சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். நடிகர் பிரகாஷ்ராஜ் பெரும்பாலும் வில்லன் கதாபாத்திரத்திலேயே நடித்துள்ளார். இவருக்கு 1994 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. மேலும் 2009 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார். தொடர்ந்து அவர் போனி வர்மா என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு வேதந்த் என்ற மகன் உள்ளார்.
இந்நிலையில் 59 வயது நிறைந்த, சுமார் 400 படங்களுக்கு மேல் நடித்துள்ள நடிகர் பிரகாஷ்ராஜ் சொத்துமதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அவரது சொத்து மதிப்பு ரூ. 35 கோடி முதல் ரூ. 40 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் அவருக்கு பெங்களூர், சென்னை மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் வீடுகள் இருப்பதாகவும், கொடைக்கானலில் பண்ணை வீடு இருப்பதாகவும் கூறப்படுகிறது.