அடேங்கப்பா.. நடிகர் மாதவன் வாங்கியுள்ள காஸ்ட்லி சொகுசு படகு.! விலையை கேட்டு வாயை பிளந்த ரசிகர்கள்!!
குக் வித் கோமாளி வரலாற்றிலேயே முதல் முறையாக.. அதிரடி என்ட்ரியால் ஆடிப்போன போட்டியாளர்கள்! தீயாய் பரவும் வீடியோ!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி அனைவராலும் ரசிக்கப்பட்டு, ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சிகென ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மேலும் பலரும் இதன் ஒரு எபிசோட்டை கூட தவறாமல் பார்த்து வருகின்றனர். இவ்வாறு ஒளிபரப்பான குக் வித் கோமாளி 1 நிகழ்ச்சியில் வனிதா விஜயகுமார், ரம்யா பாண்டியன், உமா ரியாஸ் என பல பிரபலங்கள் கலந்துகொண்ட நிலையில் வனிதா நிகழ்ச்சியின் வெற்றியாளரானார்.
இதன் வெற்றியைத் தொடர்ந்து குக் வித் கோமாளி சீசன் 2 கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 14ம் தேதியிலிருந்து துவங்கி தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இதில் போட்டியாளர்களாக நடிகை ஷகிலா, அஸ்வின், தர்ஷா குப்தா, பவித்ரா லட்சுமி, மதுரை முத்து, பாபா பாஸ்கர், தீபா, கனி ஆகியோர் பங்கேற்றுள்ளனர். மேலும் கோமாளிகளாக பாலா, புகழ், ஷிவாங்கி,மணிமேகலை சுனிதா, டிக்டாக் சரத் ஆகியோர் உள்ளனர்.
இவர்கள் செய்யும் கூத்துக்களுக்கென ஏராளமான ரசிகர்கள் கூட்டமே உள்ளது. இந்நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் புதிய திருப்பமாக, முதன்முறையாக வைல்ட் கார்டு போட்டியாளராக சீரியல் நடிகை ரித்திகா களமிறங்கியுள்ளார். அவரைக் கண்டதும் போட்டியாளர்கள் அனைவரும் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதன் பிரமோ வீடியோ வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.