வீர மங்கையின் பிறந்தநாள்.! மரியாதை செலுத்தி தவெக தலைவர் விஜய் எடுத்த உறுதி.!
நாள்கணக்கில் தொடர்ந்த இருமல், சளி.. பெண்ணை பரிசோதிக்கையில் அதிர்ச்சி.!
ரஷ்ய நாட்டைச் சேர்ந்த படுலினா என்னும் பெண் சளி மற்றும் இருமலால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வந்துள்ளார். இவரது உடல்நிலை மிகவும் மோசமான கட்டத்தில் குடும்பத்தினர் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். படுலினாவின் நிலைமையை பார்த்த மருத்துவர்கள் அவருக்கு உடனடியாக பரிசோதனை மேற்கொண்டு பார்த்துள்ளனர்.
அப்போது அவரது நுரையீரலில் உலோகத்தால் செய்யப்பட்ட ஒரு ஸ்ப்ரிங் இருந்தது கண்டறியப்பட்டது. முதலில், அவருக்கு இந்த தொடர் சளி நிமோனியாவின் காரணமாக இருக்கலாம் என்று மருத்துவமனையில் நினைத்துள்ளனர்.
ஆனால், மருத்துவர்கள் முழு பரிசோதனை மேற்கொண்ட போது ஸ்பிரிங்கினால் தான் அவருக்கு இந்த பிரச்சனை ஏற்பட்டு இருப்பது என்பது தெரியவந்துள்ளது. படுலினா ரத்த உறைதல் நோயால் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். அப்போது, அவரது உடலில் ஸ்பிரிங் பொருத்தப்பட்டது.
இதையும் படிங்க: பிறந்தநாள் பார்ட்டியில் வினோத போட்டி; விஸ்கி குடித்தவர் மாரடைப்பால் மரணம்.!
ரத்த ஓட்டத்தின் மூலமாக அந்த ஸ்ப்ரிங் நுரையீரலுக்கு சென்றிருக்கலாம் என்று மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். அடுத்த கட்டமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுமா என்பது பற்றி மருத்துவர்கள் ஆலோசித்து வருகின்றனராம்.