#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நடிகர்களின் அரசியல் பிரவேசம்., மௌனம் கலைத்த இயக்குனர் சமுத்திரக்கனி: என்ன சொன்னார் தெரியுமா?.!
தமிழ் திரையுலகில் இயக்குனராகவும், நடிகராகவும் கலக்கி வருபவர் நடிகர் சமுத்திரக்கனி. இவரின் இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியான பல படங்களில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கின்றன. இந்நிலையில், தென்காசி மாவட்டத்தில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகர் சமுத்திரக்கனியிடம், செய்தியாளர்கள் பல்வேறு கேளிவிகளை முன்வைத்தனர்.
அதற்கு பதிலளித்த நடிகர் சமுத்திரக்கனி, "நான் இதுவரை இக்கோவிலுக்கு வந்தது இல்லை. திடீரென தோன்றியதால் வந்தேன். சிவனும் - விஷ்ணுவும் ஒன்றாக இருக்கும் கோவில். நல்ல தரிசனம், மகிழ்ச்சியாக இருக்கிறது.
பழைய பாணியில் காதல்-கருத்துள்ள படங்கள் விரைவில் வரும். அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. எதிர்கால தலைமுறைக்கு நான் ஒன்றும் சொல்ல விரும்பவில்லை.
அவர்கள் சிறப்பாக இருக்கிறார்கள். நன்றாக, தெளிவாக இருக்கிறார்கள். அவர்கள் நன்றாக வருவார்கள். திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வர ஆசைப்படுவோர் வரட்டும். மக்களிடம் இருந்து நிறையா வாங்கியுள்ளார்கள், அதனை மீண்டும் மக்களிடம் கொடுக்க விரும்புகிறார்கள். வரட்டும்" என கூறினார்.