கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
#Breaking: பெண் தொகுப்பாளினி அளித்த புகாரில் பிரபல நடிகர் பரபரப்பு கைது.. அதிர்ச்சியில் திரையுலகம், ரசிகர்கள்.!
பிரபல மலையாள நடிகர் ஸ்ரீநாத் பாஷி. ரேடியோ ஜாக்கியாக வாழ்க்கையை தொடங்கிய ஸ்ரீநாத், வீடியோ ஜாக்கியாக முன்னேறி 2011 ல் இருந்து திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், யூடியூப் சேனலில் நடந்த பட ப்ரமோஷன் விழாவில் கலந்துகொண்ட நடிகர் ஸ்ரீநாத் பாஷி பெண் தொகுப்பாளர் குறித்து அநாகரீகமாக பேசியுள்ளார். இந்த விஷயம் குறித்து பெண் தொகுப்பாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து நடிகர் ஸ்ரீநாத்தை கைது செய்த நிலையில், அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், நடிகர் ஸ்ரீநாத் நான் தான் நிஜத்தில் பாதிக்கப்பட்டுள்ளேன் என்று விளக்கம் அளித்துள்ளார்.