#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
என்ன இவருமா?? வானத்தைப் போல தொடரில் இருந்து விலகும் மற்றொரு முக்கிய பிரபலம்! கடும் அதிருப்தியில் ரசிகர்கள்!!
சன் தொலைக்காட்சியில் காலை தொடங்கி இரவு வரை ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அவ்வாறு மக்கள் மனதை கவர்ந்து மாபெரும் வரவேற்பைப் பெற்ற தொடர்களில் ஒன்று வானத்தைப் போல. அண்ணன்-தங்கை பாசத்தை மையமாகக் கொண்டு ஒளிபரப்பாகிவரும் இத்தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
இதில் தங்கையின் திருமணத்திற்கு பிறகு பல அதிரடித் திருப்பங்களுடன் வானத்தைப்போல தொடர் ஒவ்வொரு நாளும் மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த தொடரில் அண்ணன் சின்ராசு கதாபாத்திரத்தில் தமன் குமார் மற்றும் தங்கை துளசி ரோலில் ஸ்வேதா ஆகியோர் நடித்து வந்தனர். இந்தநிலையில் அண்மையில் இந்த இத்தொடரில் இருந்து துளசி கதாபாத்திரத்தில் நடித்த ஸ்வேதா விலகினார்.
இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து மான்யா ஆனந்த் என்பவர் தற்போது துளசி கேரக்டரில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது மற்றொரு முக்கிய நடிகரும் தொடரில் இருந்து விலகப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது பாசமிகு அண்ணனாக சின்ராசு கதாபாத்திரத்தில் நடித்து வரும் தமன் குமார் வானத்தைப்போல தொடரில் இருந்து விலகியுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. இது ரசிகர்களுக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.