மீண்டும் அதே கெத்துடன் ‘மாஸ்டர்’ படப்பிடிப்பிற்கு சென்ற நடிகர் விஜய்! கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்!



actor vijay again in shooting

வருமான வரி துறை விசாரணைக்குப் பின்னர் மீண்டும் மாஸ்டர் படப்பிடிப்பில் நடிகர் விஜய் பங்கேற்றுள்ளார்.

பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 20-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அதேபோல், படம் தயாரிக்க கடன் கொடுத்த பைனான்சியர் அன்புச்செழியன் வீடு மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடைபெற்றது.

இதனையடுத்து நெய்வேலியில் நடந்த ‘மாஸ்டர்’ படப்பிடிப்பு தளத்துக்கு சென்று விஜய்யை விசாரணைக்கு வருமான வரித்துறையினர் அழைத்து வந்தனர். பின்னர் அங்கிருந்து அவரது காரிலேயே சென்னை அழைத்து வந்து, இரவு முழுவதும் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். 

vijay

இதனையடுத்து விஜய் வீட்டில் 23 மணிநேரத்திற்கு மேலாக நடைபெற்ற சோதனை நேற்று இரவு நிறைவு பெற்றது. வருமான வரித்துறை சோதனை நேற்று நிறைவடைந்த நிலையில், இன்று மீண்டும் மாஸ்டர் படப்பிடிப்பில் நடிகர் விஜய் பங்கேற்றார். நெய்வேலியில் நடந்த படப்பிடிப்பில் விஜய் கலந்து கொண்டதால் ரசிகர்கள், படக்குழுவினர் மீண்டும் உற்சாகம் அடைந்துள்ளனர்.