#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
"வாவ்... தன் அம்மாவுக்காக ஆலயம் கட்டிய நடிகர் விஜய்.." நெகிழ்ந்த ரசிகர்கள்.!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஜய். சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்த இவர் 2026 ஆம் வருட சட்டமன்றத் தேர்தலில் களம் இறங்க இருப்பதாக தெரிவித்திருக்கிறார். அவ்வப்போது தனது அரசியல் கட்சி நிர்வாகிகள் மீட்டிங்கையும் நடத்தி வருகிறார்.
நடிகர் விஜய் இப்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் இறுதி கட்டத்தை எட்டியதாக தெரிகிறது. தற்போது படக்குழுவினர் ரஷ்ய நாட்டில் சூட்டிங் நடத்தி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து எச் வினோத் இயக்கத்தில் விஜய் தனது கடைசி படத்தில் நடிக்க உள்ளார்.
இந்நிலையில் நடிகர் விஜய் அவரது தாய்க்கு சாய்பாபா கோயில் கட்டியிருப்பதாக இணையதளத்தில் செய்திகள் பரவி வருகின்றது. நடிகர் விஜய்யின் தாயார் ஷோபா ஒரு தீவிர சாய்பாபா பக்தர் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை கொரட்டூரில் உள்ள சாய்பாபா கோவிலில் விஜய் இருப்பது போன்ற புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலானது.
இது தொடர்பாக வெளியான செய்தியில் நடிகர் விஜய் தனது தாயின் ஆசைக்காக 8 கிரவுண்ட் நிலத்தில் சாய்பாபா கோவில் கட்டி இருக்கிறார். அந்தக் கோவிலுக்கு தான் சில நாட்களுக்கு முன்பு விஜய் சென்றுள்ளார். தளபதி விஜய் தனது தாய்க்காக கோவில் கட்டிய நிகழ்வு அவரது ரசிகர்கள் மத்தியில் நிகழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.