#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பாசத்தோடு ஊட்டி வளர்த்த தந்தை.. ! இறுதிச் சடங்கில் கூட கலந்து கொள்ள முடியாத நிலையில் விசுவின் மகள்கள்.!
தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்களில் ஒருவரான விசு இன்று உடல்நிலை மோசமான நிலையில் உயிர் இழந்தார். இயக்குனர் கே.பாலசந்தரிடம் துணை இயக்குநராக பணியில் சேர்ந்த இவர் நடிப்பு, இயக்கம், எழுத்தாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர் என பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கினார்.
சமீபகாலமாக சிறுநீரக பிரச்னைக்கு சிகிச்சை எடுத்து வந்த விசு இன்று மாலை உயிரிழந்தார். அவரது மரணம் திரைத்துறையினர் மற்றும் குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், உமா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்ட நடிகர் விசுவுக்கு 3 மகள்கள் உள்ளனர்.
இவர்கள் மூவரும் திருமணம் முடிந்து அமெரிக்காவில் வாழ்ந்துவரும் நிலையில், கொரோனா காரணமாக வெளிநாடுகலிருந்து சென்னை வரும் விமானங்களும் தடை செய்யப்பட்டுள்ளன. இதனால் நடிகர் விசுவின் மூன்று மகள்களும் தங்கள் தந்தையின் இறுதி சடங்கில் கலந்துகொள்வது கேள்விக்குறியாகியுள்ளது.