#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
"தொடர்ந்து அட்டகாசமான புகைப்படங்களை வெளியிடும் அஜித்தின் ரீல் மகள்!"
தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்குத் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா சுரேந்திரன். 2007ம் ஆண்டு "சோட்டா மும்பை" என்ற மலையாளத் திரைப்படத்தில் தான் முதலில் அறிமுகமானார். தொடர்ந்து பல மலையாளப் படங்களில் நடித்து வருகிறார் அனிகா.
இதையடுத்து 2014ம் ஆண்டு "என்னை அறிந்தால்" படத்தில் அஜித்திற்கு மகளாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். தொடந்து நானும் ரவுடி தான், விஸ்வாசம், மாமனிதன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். மேலும் சில குறும்படங்களிலும், வெப் சீரிஸிலும் நடித்துள்ளார்.
மேலும் அனிகா சுரேந்திரன் கேரள மாநில அரசின் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதுகள், மற்றும் ஆசியாநெட் விருதுகள் உட்பட பல விருதுகளை வென்றுள்ளார். தற்போது கதாநாயகியாகவும் நடித்து வருகிறார் இவர்.
இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அனிகா, அவ்வப்போது தனது அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது கியூட்டாக சிரித்தபடி போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.