அடேங்கப்பா.. நடிகர் மாதவன் வாங்கியுள்ள காஸ்ட்லி சொகுசு படகு.! விலையை கேட்டு வாயை பிளந்த ரசிகர்கள்!!
லேட்டஸ்ட் அப்டேட்... தனுஷ் படத்தில் இணைந்த குட்டி பொண்ணு அனிகா... ரசிகர்கள் எதிர்பார்ப்பு!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் தனது வித்தியாசமான நடிப்பால் ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளார். தற்போது தனுஷ் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் என்ற திரைபடத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதுடன் ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
அடுத்ததாக நடிகர் தனுஷ் தனது 50 வது படத்தில் நடிக்கவுள்ளார். அதற்காக புது கெட்டப்பாக மொட்டை அடித்துள்ளார். தனுஷ் 50 திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தில் தனுஷின் சகோதரியாக துஷாரா விஜயன், சகோதரர்களாக எஸ். ஜே சூர்யா, சந்தீப் கிஷன் நடிக்கவுள்ளார்களாம்.
தற்போது வந்த புதிய தகவல் படி தனுஷ் 50 திரைப்படத்தில் அனிகா சுரேந்திரன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம். இதற்கு முன்பு அனிகா நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதே போல் டி50 திரைப்படமும் சூப்பர் ஹூட் அடிக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.