மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Breaking: பள்ளி மாணவர்களை தாக்கிய பிரபல நடிகையுமான பாஜக பெண் பிரமுகர் அதிரடி கைது..! வைரலான விடியோவால் ஆப்பு.!
ரஜினிகாந்துடன் அண்ணாத்த திரைப்படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்த நடிகை ரஞ்சனா நாச்சியார். சம்பவத்தன்று இவர் போரூர் பகுதியில் இருந்து குன்றத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்த நிலையில், அதே வழித்தடத்தில் பயணித்த அரசு பேருந்தில் மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்தனர்.
இதனால் ஒருகட்டத்திற்கு மேல் பேருந்தை இடைமறித்து மாணவர்களை கடுமையாக கண்டித்த நடிகை, படியில் தொங்கிய மாணவர்கள் மற்றும் பேருந்தின் ஓட்டுநர், நடத்துனரை கடுமையாக கண்டித்தார். நாய்., நாய் என்று கூறி வசைபாடி ஆத்திரத்தின் உச்சத்தில் செயல்பட்டார்.
முதலில் தன்னை காவல் அதிகாரி என்று கூறி அறிமுகம் செய்ததால், பலரும் எதுவும் பேச முடியாமல் அவரின் கண்டிப்பை கண்டு அமைதிகாத்தனர். மேலும், ஒருசில மாணவர்களை கடுமையாக தாக்கியும் பேருந்தில் இருந்து இறக்கிவிட்டார்.
இந்த விடியோவும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகிய நிலையில், பாஜக பிரமுகரான நடிகை ரஞ்சனாவை காவல் துறையினர் கைது செய்தனர்.