பாக்கியாவிற்கு அடுத்தபடியாக வரும் பெரிய ஆபத்து! அதில் பாக்கியா மீண்டு வருவாரா? ப்ரோமோ வீடியோ இதோ....
ஏலகிரி மலையில் ஜோடி விபரீதம்; கள்ளக்காதலன் பலி., காதலி உயிர் ஊசல்.!

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள வில்லியனூர் பகுதியில் வசித்து வருபவர் ஜெயராமன் (வயது 45). தமிழ்நாட்டின் ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் காமாட்சி (வயது 35). இவர்கள் இருவரும் நேற்று திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஏலகிரி மலைக்கு வந்துள்ளனர்.
அங்கு கோட்டையூர் பகுதியில் செயற்பட்டு வரும் தனியார் ரிசார்ட் பங்களாவில் அறையெடுத்து தங்கி இருந்தனர். நீண்ட நேரம் ஆகியும் இவர்களின் அறையில் நடமாட்டம் இல்லை. இதனால் சந்தேகமடைந்த ஊழியர்கள் அறைக்குள் சென்றபோது, இருவரும் மயங்கி இருந்தனர்.
ஜோடியாக கிடந்த இருவருக்கு அருகிலும் மதுபாட்டில், எலிபேஸ்ட் கிடந்துள்ளது. மேலும், இருவரும் மதுவில் எலிபேஸ்ட் கலந்து குடித்து உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, தகவல் அறிந்த ஏலகிரி காவல்துறையினர், நேரில் வந்து சடலமான ஜெயராமனை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உடலை அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: ராணிப்பேட்டை: 9 வயது சிறுமிக்கு கூட்டாக சேர்ந்து பாலியல் தொல்லை; அண்ணன், உறவினர்கள் என 4 பேர் கைது.!
காமாட்சி திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். முதற்கட்ட விசாரணையில் இருவரும் கள்ளக்காதல் ஜோடி என்பது தெரியவரவே, தற்கொலைக்கான காரணம் தொடர்பாக விசாரிக்கப்படுகிறது.
இதையும் படிங்க: குளத்தில் 6 வயது சிறுவனுக்கு காத்திருந்த எமன்; நீரில் மூழ்கி பரிதாப பலி.!