#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
விஷாலின் தாமிரபரணி பட நடிகை 'பானு'வா.. இது.?! ஆச்சர்யத்தில் ரசிகர்கள்.!
மோலிவுட் திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்த நடிகை பானு, ஹரி இயக்கத்தில் கடந்த 2007-ல் வெளியாகிய தாமிரபரணி திரைப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார். தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே தமிழ் ரசிகர்களை கவர்ந்து இழுத்த பானு அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்தாலும் அவருக்கு அந்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை.
பின்னர் சில திரைப்படங்களில் நடித்திருந்தார் .அந்த படங்கள் அவருக்கு பலன் கொடுக்காத காரணத்தால் படத்தில் நடிப்பதை நிறுத்திவிட்டார். இறுதியாக பானு நடிப்பில் வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க என்ற திரைப்படம் வெளியாகியது.
அதன் பிறகு கடந்த 2015-இல் பானு ரிங்கு என்ற நபரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கியாரா எனும் குழந்தை இருக்கிறது. நீண்ட இடைவெளிக்கு பின்னர் தற்போது நடிகை பானுவின் குடும்ப புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகிய நிலையில் ரசிகர்கள் அவரை பார்த்து ஆச்சரியமடைந்துள்ளனர்.