மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தேர்தலில் போட்டியிடும் கங்கனா ரானாவத்.. அவரே வெளியிட்ட அறிவிப்பு?
ஜெயம் ரவி நடித்த தாம் தூம் திரைப்படத்தின் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் கங்கனா ரானாவத். இந்த திரைப்படத்தை தொடர்ந்து தமிழில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாக்கப்பட்ட தலைவி திரைப்படத்தில் நடித்திருந்தார்.
சமீபத்தில் வெளியான சந்திரமுகி 2 படத்தில் ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும் ஹிந்தியில் இவருடைய நடிப்பில் உருவான தேஜஸ் என்ற திரைப்படமும் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
நடிகை கங்கனா ரானாவத் எப்போதும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை தெரிவித்து வருவார். அதேபோல் பாஜகவுக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வருகிறார். அதன் காரணமாக விரைவில் அவர் தேர்தலில் போட்டியிடுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
அந்த வகையில் சமீபத்தில் அவரிடம் செய்தியாளர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவீர்களா என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த கங்கனா கடவுள் ஆசீர்வதித்தால் நான் போட்டியிடுவேன். பாஜக அரசின் முயற்சிகளால் இந்தியர்களாகிய நாம் 600 ஆண்டுகால போராட்டத்தின் வெற்றியை பார்க்க போகிறோம். உலகம் முழுக்க சனாதன தர்மத்தின் கொடியை பறக்க செய்ய வேண்டும் என அவர் கூறியுள்ளார்.