#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கோ பட ஹீரோயினுக்கு நிச்சயதார்த்தம் முடிஞ்சாச்சு.! அட.. மாப்பிள்ளை இவர்தானா?? தீயாய் பரவும் புகைப்படம்!!
தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை ராதா. இவர் சிவாஜி, ரஜினி, கமல், பிரபு, சத்யராஜ் என பல உச்ச நட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழி படங்களிலும் நடித்திருக்கிறார்.
நடிகை ராதா, ராஜசேகரன் நாயர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு கார்த்திகா, விக்னேஷ், துளசி என மூன்று பிள்ளைகள் உள்ளனர். மூத்த மகள் கார்த்திகா தெலுங்கில் ஜூஸ் என்ற திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். மேலும் தமிழில் கோ திரைப்படத்தில் நடித்திருந்தார்.
பின்னர் சில படங்களில் நடித்திருந்த நடிகை கார்த்திகா சினிமாவில் இருந்து விலகி இருந்தார். இந்த நிலையில் தற்போது கார்த்திகா நாயருக்கு திருமண நிச்சியதார்த்தம் நடைபெற்றுள்ளது. மேலும் அவர் தனது வருங்கால கணவருடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அவர்களது திருமணம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என கூறப்படுகிறது. இதை கண்ட ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.