என்னால் நம்பமுடியவில்லை!! 31 வருடங்களுக்கு பிறகு புகைப்படத்தை பதிவிட்டு நடிகை குஷ்பூ என்ன கூறியுள்ளார் பார்த்தீங்களா...!



actress-kushpu-remains-chinnathambi-movie

தமிழ் சினிமாவில் புகழின் உச்சத்தில் இருந்த நடிகைகளில் ஒருவர் குஷ்பூ.  80ஸ் காலகட்டங்களில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில்  நடித்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார்.

தற்போதுவரை ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் அவர் வெள்ளித்திரையில் மட்டுமின்றி தற்போது சின்னத்திரை சீரியலிலும் நடித்து வருகிறார். இந்நிலையில்  இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் நடிகர்  பிரபு  மற்றும் குஸ்பூ நடிப்பில் கடந்த 1991 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் சின்ன தம்பி.

இத்திரைப்படம்  குறித்து நடிகை குஷ்பூ தனது  ட்விட்டர் பக்கத்தில் சில  புகைப்படங்களை  வெளியிட்டு பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் "என்னால் நம்ப முடியவில்லை, சின்ன தம்பி திரைப்படம் வெளியாகி 31 வருடங்கள் ஆகியுள்ளது என்பதை, எல்லா தருணங்களும் புதிதாக இருந்தது. நாங்கள் நல்ல திரைப்படம் கொடுக்க நினைத்தோம், ஆனால் பி.வாசு சார் சரித்திரம் படைத்து விட்டார்" என பதிவிட்டுள்ளார் குஷ்பூ.   தற்போது இந்த  பதிவு இணையத்தில் வைரலாகி  வருகிறது.