#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
"முடியாத நேரத்திலும் கூட எம்.ஜி.ஆர் என்னிடம் கனிவாக நடந்து கொண்டார்" நடிகை லதா கண்ணீர் பேட்டி!
1970களில் புகழ்பெற்ற நடிகையாக இருந்தவர் லதா. 1973ம் ஆண்டு எம் ஜி ஆர் நடித்த "உலகம் சுற்றும் வாலிபன்" படத்தில் தான் இவர் நடிகையாக அறிமுகமானார். இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து எம் ஜி ஆரின் பல படங்களில் இவர் நாயகியாக நடித்திருந்தார்.
அதில் நேற்று இன்று நாளை, உரிமைக்குரல், சிரித்து வாழ வேண்டும், நாளை நமதே, உழைக்கும் கரங்கள், நினைத்ததை முடிப்பவன், மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன், மீனவ நண்பன், நீதிக்கு தலைவணங்கு உள்ளிட்ட பல படங்கள் உள்ளன.
இதையடுத்து லதா, சேதுபதி என்ற சிங்கப்பூர் தொழிலதிபரைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். தற்போதும் சீரியல்களில் நடித்து வரும் லதா, எம் ஜி ஆரின் நினைவு நாளான இன்று அவர் குறித்த தகவலை பகிர்ந்து கொண்டார்.
"அவருக்கு உடல்நிலை சரியில்லை என ராமாவரம் தோட்டத்திற்கு போனேன். அவருக்கு முடியாத நிலையிலும் கூட "ஏ சி காருல தான வந்த?" என்று என்னிடம் அக்கறையாக கேட்டார். அதற்கடுத்த பத்தாவது நாளிலேயே அவர் இறந்துவிட்டார்" என்று கண் கலங்க கூறினார் லதா.