திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
நடிகை மஞ்சு வாரியரின் மகளை பார்த்துள்ளீர்களா... வைரலாகும் புகைப்படம்!!
மலையாள சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை மஞ்சு வாரியர். இவர் தமிழில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படம் மூலம் தனுஷின் மனைவியாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றவர் நடிகை மஞ்சு வாரியர்.
சமீபத்தில் தல அஜித்துடன் இணைந்து துணிவு படத்தில் முதன் முறையாக அஜித்துக்கு ஜோடியாக நடித்திருந்தார். அந்த படமும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. மஞ்சு வாரியர் கடந்த 1998 ஆம் ஆண்டு மலையாள நடிகர் திலீப்பை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதியினருக்கு ஒரு மகள் உள்ளார். பின்னர் சில தனிப்பட்ட காரணங்களால் இருவரும் பிரிந்து விவாகரத்து செய்து கொண்டனர். அதன் பிறகு மஞ்சு வாரியரின் மகள் மீனாட்சி தந்தையுடன் இருந்து வருகிறார்.
இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் மீனாட்சி அவ்வப்போது புகைப்படங்களை வெளியிடுவார். அந்த வகையில் தற்போது புடவை அணிந்து அழகிய தேவதையாய் ஜொலிக்கும் புகைப்படம் வெளியிட்டுள்ளார்.