"திருமணத்திற்கு பின் இப்படி ஆகிடுச்சு".. வேதனை தெரிவித்த ஜோதிகா.!
குழந்தைகளுடன் குழந்தையாய் மாறிய நடிகர் ரவி மோகன்.! என்னவெல்லாம் செய்துள்ளார் பார்த்தீங்களா.! வைரல் வீடியோ!!

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக வலம் வருபவர் ஜெயம் ரவி. மனைவியுடன் விவாகரத்து, நடித்த படங்கள் தோல்வி என பல சிக்கல்களை சந்தித்து வந்த அவர் பல ஆண்டுகளாக ஜெயம் ரவி என ரசிகர்களால் அழைக்கப்பட்டு வந்த நிலையில் அண்மையில் தனது பெயரை ரவி மோகன் என அழைக்குமாறு ரசிகர்களுக்கு அன்புகோரிக்கை விடுத்திருந்தார்.
ரவி மோகனின் கராத்தே பாபு
நடிகர் ரவி மோகன் டாடா பட இயக்குனர் கணேஷ் கே.பாபு இயக்கத்தில் உருவாகும் தனது 34வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவர் அரசியல்வாதியாக நடிக்கிறார். கராத்தே பாபு என டைட்டில் வைக்கப்பட்டுள்ள அந்த படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலானது.
இதையும் படிங்க: முகூர்த்தக்கால் நட்டாச்சு.. நடிகை ரம்யா பாண்டியன் வீட்டில் மீண்டும் விஷேசம்.! வைரல் புகைப்படங்கள்!!
குழந்தைகளுடன் நடனம்
நடிகர் ரவி மோகன் பட வேலைகளில் பிஸியாக இருக்கும் நிலையில், ஆதரவற்றோர் இல்லத்திற்கு சென்று அங்கு குழந்தைகளுடன் நேரத்தை செலவிட்டுள்ளார். குழந்தைகளுடன் பேசி சிரித்த அவர் அவர்களுடன் நடனமாடி மகிழ்வித்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: விஷாலுடன் திருமணமா.? 15 வருட காதல் பற்றி ஓபனாக பேசிய நாடோடிகள் நடிகை.!