"திருமணத்திற்கு பின் இப்படி ஆகிடுச்சு".. வேதனை தெரிவித்த ஜோதிகா.!
மகா கும்பமேளாவில் புனித நீராடினேனா?? வைரலாகும் புகைப்படம்.! காட்டமான பிரகாஷ்ராஜ்!!

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் அசத்தலான வில்லனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகர் பிரகாஷ்ராஜ். நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டு விளங்கும் பிரகாஷ்ராஜ் அரசியலிலும் ஈடுபட்டு தனது சமூக கருத்துக்களை துணிச்சலாக கூறி வருகிறார்.
புனித நீராடினாரா பிரகாஷ்ராஜ்
இந்த நிலையில் உத்திர பிரதேசத்தில் பிரக்யாஜில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா ஜனவரி 12ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் கோடிக்கணக்கானோர் கலந்து கொண்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் பிரகாஷ்ராஜ் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவது போன்ற புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியிடப்பட்டு, 'இவர் செய்த பாவங்கள் இனி நீங்கட்டும்' என பதிவிடப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: முகூர்த்தக்கால் நட்டாச்சு.. நடிகை ரம்யா பாண்டியன் வீட்டில் மீண்டும் விஷேசம்.! வைரல் புகைப்படங்கள்!!
காட்டமான பதிவு
இது வைரலான நிலையில் இதற்கு கண்டனம் தெரிவித்து பிரகாஷ்ராஜ் பதிவு போன்ற வெளியிட்டுள்ளார். அதில், போலி செய்திகளை பரப்புவதுதான் மத வெறியர்கள், கோழைகளின் கடைசி வழி. பொய் செய்திகளை பரப்பி புனித வழிபாட்டை கூட அசுத்தம் செய்வதே இவர்களது வேலை. . போலிப் புகைப்படத்தை பரப்பியவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுக்கபட்டுள்ளது. நீதிமன்றத்தில் என்ன செய்வார்கள் பார்ப்போம் என காட்டமாக தெரிவித்துள்ளார்.
ಸುಳ್ಳು ಸುದ್ದಿ
— Prakash Raj (@prakashraaj) January 28, 2025
“ಸುಳ್ಳ ರಾಜ” ನ ಹೇಡಿಗಳ ಸೈನ್ಯಕ್ಕೆ .. ಅವರ ಪವಿತ್ರ ಪೂಜೆಯಲ್ಲೂ ಸುಳ್ಳು ಸುದ್ದಿ ಹಬ್ಬಿಸಿ ಹೊಲಸು ಮಾಡುವುದೇ ಕೆಲಸ .. police complaint ದಾಖಲಾಗಿದೆ .. ಕೋರ್ಟಿನ ಕಟಕಟೆಯಲ್ಲಿ ಏನು ಮಾಡುತ್ತಾರೋ ನೋಡೋಣ 😊 #justasking pic.twitter.com/S6ySeyFKmh
இதையும் படிங்க: விஷாலுடன் திருமணமா.? 15 வருட காதல் பற்றி ஓபனாக பேசிய நாடோடிகள் நடிகை.!