"திருமணத்திற்கு பின் இப்படி ஆகிடுச்சு".. வேதனை தெரிவித்த ஜோதிகா.!
இரட்டை சந்தோஷத்தில் கவிஞர் சினேகன்.! நெகிழ்ச்சி ததும்ப வெளியிட்ட பதிவு.! குவியும் வாழ்த்துக்கள்!!

தமிழ் சினிமாவில் பல படங்களில் ஏராளமான ஹிட் பாடல்களை எழுதி பெரும் பிரபலமாக இருந்தவர் கவிஞர் சினேகன். அவர் அமீர் இயக்கத்தில் வெளிவந்த யோகி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி பின் சில படங்களிலும் ஹீரோவாக நடித்துள்ளார். சினேகன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நிகழ்ச்சியின் இறுதிவரை சென்றார்.
இவர் பிரபல சீரியல் நடிகையான கன்னிகாவை நீண்ட காலமாக காதலித்து வந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்கள் அழகிய ஜோடியாக மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் கன்னிகா கர்ப்பமாக இருக்கும் செய்தியை சில மாதங்களுக்கு முன்பாக அறிவித்திருந்தனர். மேலும் வளைகாப்பு விழா புகைப்படங்களையும் இணையத்தில் பகிர்ந்து இருந்தனர்.
இந்த நிலையில் சினேகன் தங்களுக்கு இரு தேவதைகள் பிறந்ததாக தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில்,
இறைவா நீ ஆணையிடு தாயே எந்தன் மகளாய் மாற "... என்ற எனது அன்பின் கோரிக்கை இரட்டிப்பாய் நிறைவேறியது
தாயே எந்தன் மகளாகவும் ..
மகளே எந்தன் தாயாகவும் ...
இரு தேவதைகள் 25.01.2025 அன்று பிறந்திருக்கிறார்கள் ...
இதயமும்,மனமும்
மகிழ்ச்சியில் நெகிழ்ந்து
நிரம்பி வழிகிறது ...
உங்களின் தூய அன்பினால்
எங்கள் வாரிசுகளை
வாழ்த்துங்கள் என தெரிவித்துள்ளார். இதையடுத்து சினேகன்- கன்னிகாவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
இதையும் படிங்க: குழந்தைகளுடன் குழந்தையாய் மாறிய நடிகர் ரவி மோகன்.! என்னவெல்லாம் செய்துள்ளார் பார்த்தீங்களா.! வைரல் வீடியோ!!
இதையும் படிங்க: மகா கும்பமேளாவில் புனித நீராடினேனா?? வைரலாகும் புகைப்படம்.! காட்டமான பிரகாஷ்ராஜ்!!