#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அடேங்கப்பா.. எப்படி இருந்த நடிகை மீராஜாஸ்மின் இப்படி ஆகிட்டாங்க! லேட்டஸ்ட் புகைப்படத்தை கண்டு ஷாக்கான ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவில் மாதவன் நடிப்பில் வெளிவந்த ரன் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை மீரா ஜாஸ்மின். அதைத் தொடர்ந்து இவருக்கு பல பட வாய்ப்புகள் வந்தது. மீரா ஜாஸ்மின் பரட்டை என்கிற அழகுசுந்தரம், சண்டக்கோழி, கஸ்தூரி மான், ஆய்த எழுத்து, புதிய கீதை என தொடர்ந்து பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
இவர் தமிழ் மட்டுமின்றி மலையாளம் மொழியிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். மேலும் சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றுள்ளார். இவர் கடந்த 2014-ம் ஆண்டு அனில் ஜான் டைட்டஸ் என்பவரை திருமணம் செய்துக் கொண்டு சினிமாவிற்கு முழுக்கு போட்டார்.
இந்த காலகட்டத்தில் அவர் உடல் எடை நன்கு அதிகரித்து காணப்பட்டார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தது. ஆனால் தற்போது அவர் உடல் எடை குறைந்து செம ஸ்லிம்மாக இளமையாக மாறி உள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி ரசிகர்களை வாயடைக்க வைத்துள்ளது.