#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
4 மாத கர்ப்பம்! உயிரிழந்த தனது கணவருக்காக, மிக உருக்கமாக நடிகை மேக்னாராஜ் வெளியிட்ட முதல் பதிவு! கண்கலங்கும் ரசிகர்கள்!
கன்னட சினிமாவின் பழம்பெரும் நடிகர் சக்தி பிரசாத்தின் பேரன் சிரஞ்சீவி சார்ஜா. இவர் பிரபல நடிகர் அர்ஜுனின் மிகநெருங்கிய உறவினர் ஆவார். இவர் ஏராளமான திரைப்படங்களில் நடித்து மக்களிடையே பெருமளவில் பிரபலமாகியுள்ளார். இவரது மனைவி நடிகை மேக்னா ராஜ். இவர்கள் இருவரும் 10 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். மேலும் மேக்னா ராஜ் தற்போது 4 மாத கர்ப்பமாக உள்ளார்.
இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சிரஞ்சீவி சார்ஜா திடீர் மூச்சு திணறல் மற்றும் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் கணவர் மறைவிற்குப் பின்பு முதன்முதலாக மேக்னாராஜ், தனது கணவரைப் பற்றி மிக உருக்கமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் சிரு, நான் உங்களிடம் சொல்லவேண்டும் என்று நினைப்பதை வார்த்தைகளாக்கிச் சொல்ல முயல்கிறேன். ஆனால் என்னால் முடியவில்லை. நீங்கள் எனக்கு எவ்வளவு முக்கியம் என்பதை இந்த உலகத்திலிருக்கும் எல்லா வார்த்தைகளைச் சேர்த்தாலும் விவரிக்க முடியாது.
என் நண்பர், என் காதலர், என் குழந்தை, என் கணவர், என் நம்பிக்கைக்குரியவர் இவற்றையெல்லாம் விட நீங்கள் மேலானவர். என் உயிரின் ஒரு பகுதி நீங்கள். ஒவ்வொரு முறையும் நான் வாசல் கதவைப் பார்க்கும்போது, நீங்கள் உள்ளே நுழைந்து நான் வீட்டிற்கு வந்துவிட்டேன் என்று சொல்வதைப் பார்க்கமுடியாத வலி எனது ஆன்மாவை தாக்குகிறது. ஒவ்வொரு நிமிடமும் உங்களைத் தொட முடியாததை எண்ணும்போது என் இதயத்தில் எல்லாம் மூழ்குவது போன்ற உணர்வு.
ஆனாலும் நீங்கள் என் அருகில் இருப்பது போலவே உணர்கிறேன். நான் சோர்வடையும் போதெல்லாம் என்னைக் காக்கும் தேவதையாக நீங்கள் இருக்கிறீர்கள்.மேலும் நீங்கள் என்னை அவ்வளவு காதலித்திருப்பதால்தான் என்னைத் தனியாக விட்டுப் போக உங்களால் முடியவில்லை. நம் காதலின் சின்னமாக, எனக்கு நீங்கள் தந்த விலைமதிப்பில்லாத பரிசுதான் நம் குழந்தை.
நம் குழந்தையின் வடிவில் உங்களை மீண்டும் இந்த பூமிக்குக் கொண்டு வரும் நாளை ஆர்வத்துடன் எதிர்நோக்கி காத்துள்ளேன். மீண்டும் உங்களைத் தாங்கும் நாளுக்காக, உங்கள் புன்னகையை மீண்டும் பார்ப்பதற்காக, அறையையே ஒளிரச் செய்யும் உங்களின் சிரிப்பைக் கேட்க ஆவலுடன் காத்திருக்கிறேன். நான் உங்களுக்காகக் காத்திருக்கிறேன்.
நீங்களும் அந்தப் பக்கம் எனக்காகக் காத்திருங்கள். என் சுவாசம் இருக்கும்வரை நீங்கள் என்னுள் வாழ்வீர்கள். ஐ லவ் யூ". என உருக்கமாக மேக்னா ராஜ் தெரிவித்துள்ளார்.