#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
"அந்த மாதிரி விஷயத்தில் எனக்கு ரொம்பஆசை" பேட்டியின்போது மனம் திறந்த நக்மா.?
90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நக்மா. இவர் நடிகை ஜோதிகாவின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் பாட்ஷா, பிஸ்தா, காதலன் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.
1990ம் ஆண்டு பாலிவுட்டில் தான் நக்மா அறிமுகமானார். அதன்பிறகு ஹிந்தி, தெலுங்கு என பல படங்களில் நடித்து வந்த இவரை, இயக்குனர் ஷங்கர் தான் 'காதலன்' படம் மூலம் தமிழுக்கு அழைத்து வந்தார்.
ஒருகட்டத்தில் வாய்ப்புகள் குறைந்தபோது, தீனா படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடினார். தமிழில் வாய்ப்புகள் இல்லையென்றாலும் மற்ற மொழிகளில் தொடர்ந்து நடித்து வந்தார். சமீபத்தில் அவர் பேட்டியளித்துள்ளார்.
அப்பேட்டியில் அவர் கூறியதாவது, "எனக்கு 48 வயதாகிறது. திருமணம் செய்யக்கூடாது என்று நான் நினைக்கவில்லை. எனக்கும் திருமணம் செய்து வாழ ஆசைதான். இனிமேலாவது அப்படி ஒரு வாழ்க்கை அமைகிறதா என்று பார்ப்போம். ஆனால் இப்போதும் நான் மகிழ்ச்சியாகத் தான் இருக்கிறேன்" என்று நக்மா கூறியுள்ளார்.