#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அட, நம்ம வாணி ராணி தேனுவா இது! கொழுகொழுவென லட்டுமாதிரி இருக்காரே.. புகைப்படங்களை பாத்தா சொக்கி போயிருவீங்க!
சீரியல் மற்றும் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக குட்டிப் பாப்பாவாக அறிமுகமான பிரபலங்கள் பலரும் தற்போது நன்கு வளர்ந்து ஹீரோயின்களை மிஞ்சும் அளவிற்கு போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் அனைவரையும் வாயடைக்க வைத்து வருகின்றனர்.
இவ்வாறு சமீபகாலமாக விசுவாசம் படத்தில் அஜித்தின் மகளாக நடித்த அனிகா வித்தியாசமாகவும், கிளாமராகவும் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தையே தெறிக்கவிட்டு வருகிறார். அவரைப்போலவே பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிள்ளை நிலா சீரியல் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நேஹா மேனன்.
அதனைத் தொடர்ந்து அவர் ராதிகா நடிப்பில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற வாணி ராணி தொடரில் தேனு என்ற கதாபாத்திரத்தில் சுட்டிப் பெண்ணாக நடித்து அனைவரையும் பெருமளவில் கவர்ந்தார். பின்னர் தற்போது சித்தி 2, பாக்யலட்சுமி உள்ளிட்ட தொடர்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நன்கு வளர்ந்து கொழுகொழுவென இருக்கும் நேஹா மேனனின் போட்டோசூட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி ரசிகர்களை வாயடைக்கவைத்துள்ளது.